சிதைக்கப்பட்ட மானுடம் – ஒரு ‘தடா’ கைதியின் குமுறல் கள், ஆசிரியர்: அ. அருள்தாஸ், வெளியீடு: மக்கள் கண்காணிப் பகம், 6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை-625 002. பக்: 196 விலை: ரூ.250. இந்நூல் ஆசிரியர் அருள்தாஸ் சந் தனக் கடத்தல் வீரப்பனுக்கு துணை போனதாகக் குற்றம் சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர். மனித உரிமை அமைப்புகளின் விடாப் பிடியான போராட்டத்திற்குபின் விடு தலையானவர். இந்நூல் ஆசிரியர் தன் வாழ்க்கையில் சந்தித்த சித்ரவதைகள், மன உளைச்சல்கள், சட்டப் போராட் டங்கள், சிறையின் அவலம், அதிகார வர்க்கத்தின் மரத்துப்போன இதயம் இவற்றை சொந்த அனுபவத்தில் நூலாக் கியிருக்கிறார். சித்ரவதை என்பது அடி ப்பதும் உதைப்பதும் மட்டும் அல்ல. எந்த வித முகாந்திரமும் இன்றி மனைவியை, குழந்தைகளை பிரிந்தி ருக்கும் கொடுமை, இதனால் அவர்கள் அனுப விக்கும் மன வலி என அனைத் தையும் இதயக் குமுறலோடு இந்நூல் படம் பிடிக் கிறது. மனித உரிமையைப் போற்றுகிற பாதுகாக்கப் போராடுகிற ஒவ்வொரு வரும் இந்நூலை வாசிப்பது அவசியம்.

Leave A Reply