சென்னை,பிப்.18- நில அபகரிப்பு வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், தஞ்சை காவல்துறையிடம் கொடுத்த புகாரில், தனக்கு சொந்தமான 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை நடராஜன் தூண்டுதலின் பேரில் சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், இடத்தை திருப்பி கேட்டபோது நடராஜ னுடன் சேர்ந்து சிலர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வும் கூறினார். இதன் பேரில் தஞ்சை டி.ஐ.ஜி அமல்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் நடராஜன் மற்றும் ஒருவரை அழைத்து சென் றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு இடிப்பு வழக்கில் சசிகலா உறவினர்கள் திவா கரன், ராவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: