சென்னை, பிப். 18 – சங்கரன் கோவில் சட்ட மன்ற தொகுதியில் இடைத் தேர்தலில் திமுக சார்பில் ஜே.ஜவகர் சூரியகுமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட் டம் சங்கரன் கோவில் தொகுதிக்கு அடுத்த மாதம் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட் டியிடும் அதிமுக தனது வேட்பாளராக முத்துச் செல்வியை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கரன் கோவில் நகர வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஜே.ஜவகர் சூரியகுமார் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளார். 41 வயதாகும் ஜவகர் சூரியகுமார் வழக்கறிஞர் ஆவார். இவருக்கு வாசுகி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர். ஜவகர் சூரியகுமார் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச் சலத்தின் சகோதரர் மகன் ஆவார்.

Leave A Reply

%d bloggers like this: