சென்னை, பிப். 18 – தமிழகத்தில் காலியாக உள்ள சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு வரும் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடு கள் குறித்து தலைமை தேர் தல் அதிகாரி பிரவின் குமார் சென்னை கோட்டையில் பேட்டியளித்தார். சங்கரன் கோவில் தொகு தியில் 2 லட்சத்து 5 ஆயி ரத்து 870 பேர் வாக்காளர் களாக உள்ளனர். 100 விழுக் காடு மின்னணு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடக்கும். இதற்காக 242 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். தேர்தல் பணியில் ஈடு படும் ஊழியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப் படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கேமிரா பொருத்தப்படும். வாக்கா ளர்களுக்கு பணம் கொடுப் பதை தடுக்க 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும், வாகன சோதனைக்காக 10 இடங் களில் செக் போஸ்ட் அமைக் கப்படும். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து வாக்குச் சாவ டிகளும் பதற்றமானவை யாக கருதி, பாதுகாப்பு அளிக்கப்படும். 12 கிராமங் கள் தூத்துக்குடி மாவட்டத் திலும், பிற கிராமங்கள் திரு நெல்வேலி மாவட்டத்திலும் உள்ளதால் இந்த மாவட்டங் களில் புதிதாக எந்த திட்டங் களும் செயல்படுத்தக்கூடாது. வெளி ஆட்கள் தங்குவதை தடுக்க முழுமையாக கண் காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.