நியூசிலாந்து அணிக்கு எதி ரான முதல் டுவென்டி20 கிரிக் கெட் ஆட்டத்தில் ஆறு விக் கெட் வித்தியாசத்தில் தென் ஆப் பிரிக்க அணி அதிர்ச்சிகரமாகத் தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட் டங்களைக் கொண்ட டுவென் டி20 தொடரில் பங்கேற்று வரு கிறது. அதன் முதல் ஆட்டம் வெல்லிங்டன் நகரில் நடைபெற் றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க அணியை முதலில் பேட் செய்ய வைத்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. அந்த அணியின் டுமினி 41 ரன்களை எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத் மூன்று விக்கெட்டுக ளைக் கைப்பற்றினார். 148 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது ஆட்டத்தைத் துவங்கிய நியூசி லாந்து அணி 19.2 ஓவர்களில் நான்கு விக்கெட் டுகளை இழந்து 148 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. மார்ட்டின் கப்தில் 55 பந்துக ளில் 78 ரன்களை எடுத்து ஆட் டமிழக்காமல் இருந்தார். அவ ருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: