விருதுநகர், பிப். 18- தலித் இளைஞரை அடித் துக் கொன்ற காவல்துறை யினரையும், அதற்குத் துணைபோன அதிகாரிக ளையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருது நகர் மாவட்டக் குழு வன் மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் அ.சேகர் அறிக் கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திற்கு உட் பட்டது புதுக்கோட்டை பாறைப்பட்டி. இவ்வூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் டிராக்டர் ஓட்டுன ராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 15 அன்று காலை 6 மணிக்கு சின்னக் காளை என்பவரின் டிராக் டரை எடுத்துக் கொண்டு அழகாபுரி அருகே உள்ள வடுகபட்டி ஓடை வழி யாகச் சென்றுள்ளார்.அங்கு நத்தம்பட்டி காவல்நிலை யத்தைச் சேர்ந்த 2 காவ லர்கள் மணல் அள்ளுவதை தடுப்பதற்காகச் சீருடை யின்றி நின்றுள்ளனர். பால முருகன் ஓட்டி வந்த டிராக் டரை உடனே நிறுத்தியுள் ளனர். அப்போது பாலமுரு கன், நான் மணல் அள்ள வர வில்லை எனக் கூறியுள் ளார்.இதைகேட்காத காவ லர்கள் பாலமுருகனை வண் டியிலிருந்து கீழே இழுத்துப் போட்டு, கையில் வைத் திருந்த கடப்பாறையால் கடு மையாக தாக்கியுள்ளனர். அதில் அவரது மார்பு மற் றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனால் நிலை தடுமாறிய பாலமுருகன் மயங்கி தரையில் விழுந்து விட்டார்.அப்போது டிராக் டரை பின் தொடர்ந்து வந்த அதன் உரிமையாளர் சின் னக்காளை உடனே, பால முருகனின் அண்ணனிடம் செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். பின்பு கீழே விழுந்து கிடந்த பாலமுரு கனை தூக்கியுள்ளார். அப் போது அவர் இறந்து போனது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் அனைவரும் பாலமுருகன் மரணத்திற்குக் காரணமான வர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதன் பிறகும் நத்தம்பட்டி காவல் நிலையமோ, திரு வில்லிபுத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பா ளரோ நேர்மையான நட வடிக்கை எடுக்கவில்லை. பின்பு, பக்கத்து கிராமத்தி னருக்கும், இவர்களுக்கும் மணல் அள்ளுவதில் ஏற் பட்ட பிரச்சனையில் கொலை செய்யப்பட்டார் என்றும் தவறான தகவலை கொடுத் துள்ளனர். மேலும், சம்ப வத்தை நேரில் பார்த்த டிராக்டர் உரிமையாளர் சின்னக்காளையை சட்ட விரோதமாக காவல்நிலை யத்தில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளனர். இந்நிலையில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட் டச்செயற்குழு உறுப்பினர் கள் பி.என்.தேவா, சி.முரு கேசன் ஆகியோர் பாறைப் பட்டிக்கு சென்று விசாரித் தனர். பின்பு, ஊராட்சிமன் றத் தலைவர் காளியப்பன், வழக்கறிஞர் செந்தில்முரு கன், ஒன்றிய குழு உறுப் பினர் காளிமுத்து மற்றும் பாலமுருகனின் உறவினர் ஆகியோரை அழைத்துக் கொண்டு மதுரை காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கை சந்தித்தனர். அதன் பிறகே, காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட டிராக்டர் உரிமையாளர் சின்னக் காளை விடுவிக்கப்பட்டார். காவல்துறையை சார்ந்த வர்களே தலித் இளைஞரை அடித்து கொன்றுவிட்டு, பிரச்சனையை திசை திருப் பும் வேலையை செய்து வரு கின்றனர். இதனை சிபி எம் விருதுநகர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக் கிறது. மேலும் கொலையில் ஈடுபட்ட 2 காவலர்கள் மற் றும் இவர்களுக்கு உடந்தை யாக இருந்த காவல் ஆய்வா ளர், சார்பு ஆய்வாளர் ஆகி யோர் மீதும் வன்கொடுமை சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும். பால முருகனின் குடும்பத்தின ருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.