உத்தரப்பிரதேச சட்ட மன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தப் பர பரப்பான கட்டத்தில் உத்த ரப்பிரதேச- அரியானா எல் லையில் ஏராளமான பண்ணை வீடுகள் மள, மள வென்று கட்டப்பட்டு வரு கின்றன. ‘நொய்டா’ என் பதே புதிய ஓக்லா தொழில் வளர்ச்சி முகமை என்பதன் சுருக்கம்தான். அதனால் உருவான பகுதிதான் ‘நொய்டா’ என்பதாகும். பண்ணை வீடுகள் உருவாகி வரும் பகுதிக்கு “புதிய நொய்டா” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒளி விளக்குகள், சிமெண்ட் சாலைகள் என்று அப்பகுதி களைகட்டுகிறது. இந்தக் குடியிருப்புகள் சட்ட விரோதமாக எழும்பி வருகின்றன. யமுனா நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இவை கட்டப்படுவதே இதற்குக் காரணமாகும். நிலக்கொள்ளையர்கள் இப்பகுதியில் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி அவற்றில் பண்ணைவீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார் கள். இந்த மண்டலத்தில் உள்ள நிலங்கள் பற்றிய சட்ட விதிகள் அனைத்தும் மீறப்படுகின்றன. சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிர மிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை யமுனா நதியை ஒட்டியே உள்ளன. அதுவும் உத்தரப்பிரதேசம்- அரியானா எல்லையில் 30 கி.மீட்டருக்கு பண்ணை வீடுகள் நீளுகின்றன. அதிக இடம் கொண்ட வீடுக ளுக்கு கிராக்கி இருக்கும் நிலையில், இது போன்ற இடங்களைப் பார்த்து மயங்கி ஏமாந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. சுற்றுச்சூழல் குறித்த சட் டங்கள் இருந்தாலும், இத்த கைய கட்டிடங்கள் பற்றி சட்டங்கள் இயற்றப்பட வில்லை. ஒழுங்குபடுத்துவ தற்கு எந்தவொரு அமைப் பும் கிடையாது. ஒரு வேளை இந்த ரியல் எஸ் டேட்காரர்கள் மீது சட் டம் பாய்ந்தாலும் அவர்கள் மீது அபராதம் எதுவும் விதிக்கப்படாது. சிறைத் தண்டனை இல்லை. இதை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிகபட் சமாக, கட்டிடத்தை அப்பு றப்படுத்தி விடுவார்கள். சுற் றுச்சூழல் பாதுகாப்பு சட் டம் (1986)ன் கீழ் கடற்கரை முறைப்படுத்தும் மண்ட லம் போன்று நதி முறைப்ப டுத்தும் மண்டலம் உருவாக் குவதில் சுற்றுச்சூழல் அமைச்சகம் காட்டும் தாம தம் தான் இதற்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் குற்றம் சாட்டுகிறார் கள். இந்த ஆற்றுப்படுகை மிக முக்கியமானது என்று சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதற்காக அவருக் குக் கிடைத்த பரிசு, துறை மாற்றம் தான். ஊரக வளர்ச் சித்துறைக்கு அவர் மாற்றப் பட்டார். இது எங்கள் கட் டுப்பாட்டுக்குள் வர வில்லை என்று நொய்டா நிர்வாகத்தினர் கை கழுவுகி றார்கள். ஆனால் 2031 ஆம் ஆண்டுக்கான நொய்டா திட்டத்தில் இந்தப்பகுதிக ளில் விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண் டும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. உத்தரப்பிரதேச பாசனத்துறை அதிகாரி களோ, இந்த நிலங்கள் அர சுக்குச் சொந்தமானவை அல்ல. கிராம சபைகளுக்கோ அல்லது கிராமத்தினருக்கோ, சொந்தமானவையாகும். இங்கு சொத்துக்களை வாங்க வேண்டாம் என்று எச்சரிப்பதோடு எங்கள் வேலை முடிந்து விடுகிறது என்கிறார் பாசனத்துறை அதிகாரியான பிரேம்சந்த். அதே வேளையில் “இந்த பண்ணை வீடுகள் அனைத்துமே சட்ட விரோ தமானவை” என்கிறார் அவர். ஆற்றின் போக்கில் அதன் இரு புறமும் 500 மீ தூரத்திற்கு எந்த விதமான கட்டிடமோ அல்லது சாலையோ அமைக்கக்கூ டாது என்பது சட்டமாகும். ஆனால் நொய்டாவின் 94,125, 126,128,131 மற்றும் 135 பிரிவு களுக்கு இணையாக சிமெண்ட் சாலைகள், ஒளி வீசும் தெரு விளக்குகள் என்று தடபுடலாக வேலை கள் நடக்கின்றன. கட்டிடங் கள் எழும்பாத மனைகளில் சுற்றுச்சுவர்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஃபுளோரா ஃபார்மஸ், கிரின்பியூட்டி, எச்.பி.எஸ், ஃபார்ம்ஸ் போன்ற பெரிய நிலம், எஸ்டேட் நிறுவனங் கள் இந்த சட்ட விரோத வேலையில் ஈடுபட்டுள் ளன. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள பண்ணை வீடுகளில் இரவு கேளிக்கை விருந்துகள், நிகழ்ச்சிகள் என்று ஏற்பாடுகள் உள் ளன. இத்தனைக்கும், ஃபு ளோரா நிறுவனத்தை நொய்டா நிறுவனம் தனது கருப்புப்பட்டியலில் வைத் திருக்கிறது. தரகர்களோ, விதிகளை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. விக் ரம் சர்மா என்ற தரகர், நேற் றுதான் தில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு பண்ணை வீடு ஒன்றை விற்றுக்கொடுத் தேன். அது சட்ட விரோத மானதாக இருந்தாலும், எனக்கு அதைப்பற்றிக் கவ லையில்லை என்கிறார். விவ சாய நிலங்கள்குறைந்ததால், காய்கறி விலைகள் அதிகரித் துள்ளன. பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. பண்ணை வீடுகளாக மாற்றப்பட் டுள்ள நிலங்களில் காய்கறி கள் விளைந்தால், ஒட்டு மொத்த நொய்டா மற்றும் தில்லியின் ஒரு பகுதிக்குத் தேவையான அளவு காய்கறி களை வழங்க முடியும் என் கிறார் விவசாயிகள் சங்கத் தைச் சேர்ந்த துஷ்யந்த் நாகர். லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கு வது தான் பிரச்சனை என்கி றார்கள் சுற்றுச்சூழல் ஆர் வலர்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.