இந்தியாவில் 2011 ஆம் ஆண்டின் அக் டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான் காவது காலாண்டில் கம்ப்யூட்டர்கள் விற் பனை முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 6.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய் வின் வாயிலாக தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு நான்காவது காலாண்டில் கணினி விற்பனை 25 லட்சமாக குறைந்துள்ளது. இதில் டெஸ்க்டாப்கம்ப்யூட்டர்கள்விற் பனை மட்டும் 18 சதவிகிதம் சரிவடைந்துள் ளது என கார்ட்னர் நிறுவனத்தின் முதன் மை ஆய்வாளர் விஷால் திரிபாதி தெரி வித்துள்ளார். இதற்கு முக்கியக் காரணம், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட வெள்ளத் தால் ஹார்டு டிஸ்க்குகள் போது மான அள வில் கிடைக்காததேஎனஅவர்மேலும் கூறியுள்ளார். அதே சமயம் நினைத்த இடத் திற்கு எடுத்துச் செல்லும் போர்ட்ட பிள் கம்ப்யூட்டர்கள் விற்பனை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கணினி விற்ப னையில் ஏற்பட்டிருக்க வேண்டிய அதிக சரிவு குறைந்துள்ளது.இந்தியாவில்கம்ப்யூட் டர்கள் விற்பனை யில் பன்னாட்டு நிறுவனங் கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் டெல், லினோவா, எச்.பி. மற்றும் ஏசர் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மட் டும் 53.1 சதவீதமாக உள்ளது. அதே சமயம் நம் நாட்டைச் சேர்ந்த எச்.சி. எல். நிறுவனத் தின் பங்களிப்பு 5.5 சதவீத மாக மட்டுமே உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: