றுநடஉடிஅந வடி வாந குசநந றுடிசடன ஹ குசநந ளுடிகவறயசந ஐnவையைவiஎந – தொகுப்பு: சி. அரவிந்தன், வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, சென்னை-18. பக் : 100 விலை: ரூ.100. கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வு மெல்லப் பரவி வருகிறது. அது மேலும் வலுவாக விரைவாக ஓங் கிட இந்நூலும் உதவும். 9 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் மென்பொருளை பன் னாட்டு நிறுவனங்கள் கையிலிருந்து மீட்டு மக்கள் சொத்தாக்க வேண்டியதின் அவசியத்தை அதற்கான மாற்று முயற்சிகளை, சாத்தியக்கூறுகளை பல கோணங்களில் எடுத்துரைக்கிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் இப்பொருள் குறித்துப் பேசுபவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என்பதால் பிரச்சனை இல்லைதான். ஆனால் கட்டற்ற மென்பொருள் ஒரு சமூக கோரிக்கையாக வலுப்பெற இந் நூலை தமிழில் தரலாம் அல்லது தமிழில் இதுகுறித்து புதிய நூலொன்று யாத்தி டலாம். செய்வார்கள் என்று நம்புகிறோம்.

Leave A Reply