சென்னை, பிப். 18 – பிப்ரவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 19-2-2012 மற்றும் 15-4-2012 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக நிறுவப்பட்டு 19-2-2012 அன்று சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல்ஸ் போலியோ நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 903 நகரும் மையங்கள் நிறுவப் பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 838 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தை களுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

Leave A Reply