புதுதில்லி, பிப். 18- தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தை உருவாக்க வேண்டும் என்பது நிர்வாக வச திக்காக அமைக்கப்படும் அமைப்பாகும். நாட்டின் ஒருமைப்பாட்டைப் பலவீன மாக்க வேண்டுமென்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று தகவல் ஒலிபரப் புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சரின் முன் மொழிவிற்காக தற்போதைய சட்டங்களில் எந்த விதமான மாற்றங்களும் கொண்டு வரப்பட மாட்டாது என்பதை உள்துறை செயலரின் அறிக்கை தெளிவாக்குகிறது. அல்லது இதற்காக நாடாளுமன்றத்தை அணுக வேண்டிய அவசியமெதுவும் ஏற் படவில்லை என்று முன்மொழியப்பட் டுள்ள தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் குறித்து அம்பிகா சோனி தெரிவித்தார். நான் அறிந்துகொண்டவரையில் இது ஒரு நிர்வாக முடிவேயாகும், நாட்டின் ஒருமைப்பாட்டில் தலையிடவோ அல்லது பலவீனப்படுத்தவோ மத்திய அரசு விரும்ப வில்லை என்று அம்பிகா சோனி பத்திரிகை யாளர்களிடம் தெரிவித்தார். நாட்டின் ஒருமைப்பாட்டை பலவீன மாக்க மன்மோகன் சிங் அரசு ஒருபோதும் விரும்பியதில்லை என்று மாநில முதல்வர் கள் அறிவார்கள். தீவிரவாதம் மற்றும் அர சியல் இரண்டுக்கும் இடையில் பொது வானது என்று எதுவுமே இல்லை. தீவிரவா தத்தை அரசியலாக்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். காங்கிரஸ் நெருக்கடியின் கீழ் தேர்தல் ஆணையம் பணியாற்றி வருகிறது என்ற சமாஜ்வாதிக் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, சமாஜ்வாதிக் கட்சி பல சமயங்களில் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறது என்று பதிலளித்தார். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக எதையாவது சமாஜ்வாதிக் கட்சி சொல்லி வருகிறது. காலையில் ஒன்றைச் சொல் கிறார்கள்; மாலையில் மற்றொன்றைச் சொல்கிறார்கள். அதனடிப்படையில் பதி லளிக்க என்னால் இயலாது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.