கொச்சி, பிப். 18- இந்திய மீனவர்களை கடற் கொள்ளையர்கள் என்றுநினைத்து சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பல் மாலுமிகள் மீது கொச்சி காவல் துறை கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. தீவிர விசாரணைக்குப் பிறகே கொலை வழக்கை காவல்துறையி னர் பதிவு செய்துள்ள நிலையில், மாலுமிகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். கப்பல் மாலுமிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் காவல்துறையினர் தீவிர விசார ணை நடத்தி பல ஆதாரங்களை கைப்பற்றிய பிறகே கொலை வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு உறவும் பாதிக்கப் படாத வகையில் சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மீனவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது மிகவும் மோசமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: