இராஜபாளையம், பிப். 18- இடதுசாரி ஜனநாயக மாற்றத்தை உருவாக்க நாம் போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்மாநில மாநாடு இராஜபாளையத்தில் வெள் ளியன்று துவங்கியது. மாநாட்டில் உரையாற்றும் போது ஏ.பி.பரதன் மேற் கண்டவாறு கூறினார். அவர் மேலும் பேசியதா வது:- உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித் தது. இந்தியாவில் காப்பீ ட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பொதுத்துறை யாகபிரம்மாண்டமாகஇருந் ததால் தான் இந்தியா உலக நெருக்கடியை தாங்கியது. ஆனால் மன்மோகன்சிங், ப.சிதம் பரம், மாண்டேக் சிங் அலுவாலியா போன் றவர்கள் இதைத் தனியாரி டம் தர வேண்டும் என கூறி வருகின்றனர். பொதுத் துறையை பாதுகாப்பதோடு நாட்டையும் பாதுகாக்க இடதுசாரிகள் போராடி வருகி றோம். இந்திய அரசு கடைப் பிடிக்கும் கொள்கை அதன் கொள்கை அல்ல. அமெரிக் காவின் கொள்கை. மேலும் உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் கூறுவதை அமல் படுத்தி வருகிறது.இதனால் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் லாபமடை கின்றனர். ஆனால் கோடிக் கணக்கான மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை மென் மேலும் உயர்ந்து வருகிறது. பி.ஜே.பி, காங்கிரஸ் இரண்டும் முதலாளித்துவக் கட்சி. இரண்டும் ஒரே கொள்கை உடையது. இரு வரும் அமெரிக்கக் கொள் கையை அமல்படுத்துவார் கள். கட்சியின் பெயர் தான் வேறு. முதலாளிகள் இந்த இரண்டில் எது ஆட்சிக்கு வந்தாலும் நல்லது என நினைக்கின்றனர். பி.ஜே.பி மறைமுகமாக வகுப்பு வாதத்தை தூண்டி மக்களைப் பிரித்து வருகி றது. தமிழகத்தில் அக்கட்சி பலவீனமாக இருந்தாலும் அதை நாம் எச்சரிக்கையா கவே பார்க்க வேண்டும். இடதுசாரி ஜனநாயக மாற் றத்தை உருவாக்க நாம் போராட வேண்டும். போராட் டத்தால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். பிப்ரவரி 28 ல் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடை பெறுகிறது. இதில் கோடிக் கணக்கான தொழிலாளர் கள் தங்களது உரிமைகளுக் கான போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். வணி கர்களும் இதில் பங்கேற் கின்றனர் எனக் கூறினார்.

Leave A Reply