திருவாரூர், பிப். 18- திருவாரூர் கராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர், நல்லப்பா நகர், தோப்புத் தெரு போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஒரு ஆதிக்கச்சுவற்றினால் பெரும் அவ திக்கு ஆளாகி வருகின் றனர். இந்த 4வது வார்டுக்கு உட் பட்ட பகுதி யில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இதில் தலித் சமூகத்தை சார்ந்த நூற் றுக் கணக்கான குடும்பங் களும் அடங்கும். பல்வேறு சமூகத்தினர் மிகுந்த ஒற்றுமை யுடன் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண் டும் என்றால் துர்காலயா சாலையில் காமாட்சிஅம்மன் கோயில் எதிரில் உள்ள ஒரே ஒரு சாலை வழியாகத்தான் சென்றுவரவேண்டும். இந்த சாலையில் பாதாளச் சாக்கடை பணிகள் முடிவு பெறாத நிலையில் கரடுமுர டான சாலையாக இது இருந்து வருகிறது. இப்பகுதிக்கு சாலை அமைப்பதற்கு திருவாரூர் நக ராட்சியில் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. பாதாளச் சாக்கடை பணிகள் முற்றுப்பெற்றால்தான் சாலை அமைக்கப் படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தினர் தெரிவித் துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த பணி தொடங்கப்பட்டால் இப்பகுதி மக்கள் சென்று வருவதற்கென்று எந்த பாதையும் இல்லை. அதே நேரத்தில், பாலாஜி நகர், நல்லப்பா நகர், தோப்புத் தெரு பகுதிகளுக்கு சென்று வர ஏற்கனவே இருந்த பாதை கள் சில ஆதிக்க சக்தியின ரால் சுவர் எழுப்பி தடுக்கப்பட் டுள்ளன. குறிப்பாக நல்லப்பா நகர் விஸ்தரிப்பில் ஏற்கனவே மக்கள் சென்றுவந்த ஒரு பாதை இருந்தது. பொதுப் பணித்துறைக்கு சொந்தமான ‘பி’ வாய்க்கால் நீர்நிலையில் அதன் கரையை ஒட்டி ஒரு வலுவான சுற்றுச்சுவர் எழுப் பப்பட்டு இந்த பாதை தடுக் கப்பட்டுள்ளது. அதே போன்று இதே விஸ்தரிப்பின் மற்றொரு இடத் தில் துர்காலயா சாலைக் கும் விஸ்தரிப்பு நகருக்கும் இடை யே உள்ள பி வாய்க்கால் கரை யில் ஒரு தனி நபர் வீட்டைக் கட்டி அந்தச் சாலையையும் அடைத்துள்ளார். இந்த நிலையில் பாதாளச் சாக்கடை பணிக்காக மிக விரைவில் துர்காலயா சாலை யில் காமாட்சிஅம்மன் கோவில் எதிர்புறம் உள்ள சாலை வழி யாக சென்று வரும் ஒரே பாதையையும் அடைக்க இருப் பதாக தமிழ்நாடு குடிநீர்வடி கால் வாரியத்தினர் அறிவித் துள்ளனர். இந்த சூழ்நிலை ஏற் பட்டால் இந்த பணிகள் அனைத்தும் முடியும் வரை யில் இப்பகு திக்குள் மக்கள் முடங்கிக்கிடக்க வேண்டி யதுதான். வேறு வழியில்லை. இந்த துயரமான நிலை மையை அறிந்த இப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் ஜி.வரத ராஜன்(சுயே) கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் சி.நடராசனிடம், இப் பகுதி மக்களோடு சென்று மக் கள் குறைதீர்க்கும் நாள் கூட் டத்தில் மாற்றுச் சாலை வேண் டியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்டு ஏற்கனவே மக்கள் சென்றுவந்த பாதை களை திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். உடனடியாக மாவட்ட ஆட் சியர் அந்த மனுவை திருவா ரூர் நகராட்சி ஆணையர் க.சர வணனின் கவனத்திற்கு கொண்டு சென்று, இப்பிரச் சனையில் உடனடி தீர்வு காண வேண்டும் என உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து உட னடியாக செயல்பட்ட நகராட்சி ஆணையர் க.சரவணன் நக ராட்சி நில அளவையர் உள் ளிட்ட அதிகாரிகளோடு மேற் கண்ட நகருக்கு சென்று தனி நபர்களால் ஆக்கி ரமித்து எழுப்பப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து ஆய்வு செய்தார். இதில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் நகராட்சி மற்றும் பொதுப் பணித்துறைக்கு சொந் தமானது என்று உறுதி செய் யப்பட்டது. இந்நிலையில் சிலர் நக ராட்சி நிர்வாகத்தை அணுகி, அதிகாரிகளின் நடவடிக் கையினை முடக்குவதற்கு நிர்ப்பந்தப் படுத்துவதாக கூறப் படுகிறது. எனவே நகராட்சி நிர் வாகம் எத்தகைய தலையீட் டிற்கும் இடம் கொடுக்காமல், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயம் வழங்கும் வகையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுப் பாதையினை திறந்துவிட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், குறிப்பாக பெண் கள் கோரிவருகின்றனர். இந்த ஆக்கிரமிக்கப்பட்ட பாதையை திறந்துவிடவேண் டும் என்று கடந்த 2007ம் ஆண்டு திருவாரூர் நகர்மன் றத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டு இன்று வரை அது செயல்படுத்தப்படாமல் உள்ள தும் குறிப்பிடத்தக்கதாகும். மக்களின் கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில் இப் பகுதியில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் ஒன்று சேர்ந்து தொடர் போராட்டங்களை நடத்து வதற்கும் தயாராகி வருகின்றனர். மக்களை வீதிக்கு தள்ளாமல் பிரச்ச னையை தீர்த்து வைக்க வேண்டியது நகராட்சி மற் றும் அரசு நிர்வாகத்தின் பொறுப் பாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.