திருநெல்வேலி, பிப். 18- நெல்லையில் ஆட் டோத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பெட்ரோல்,டீசல்விலை யை நிர்ணயம் செய்வதை பெட்ரோலிய நிறுவனங் களிடமிருந்து மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் பெட் ரோல் -டீசல் வழங்க வேண் டும்,போக்குவரத்துஅலுவல கங்களில் தமிழில் படிவங் களை வழங்கிட வேண்டும், நிறுத்தி வைக்கப் பட்டுள்ள டீசல்ஆட்டோக்களுக்கான பெர்மிட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை முன்வைத்துபாளைஜவஹர் மைதானத்தில் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் கள சங்க மாவட்டத் தலை வர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கிலிமுத்து, மாரியப்பன், கோபி ஆகியோர் முன்னி லை வகித்தனர். சங்க மாவ ட்ட பொதுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி துவக்கி வைத்துப் பேசினார். சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மா வட்ட பொதுச் செயலாளர் மனோகரன், சிஐடியு மாவ ட்ட இணைச் செயலாளர் சுடலைராஜ், வழக்கறிஞர் ராஜசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.மோகன் நிறை வுரையாற்றினார். சங்க மா வட்டப் பொருளாளர் கன கராஜ், சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர்கள் எஸ்.ஆறுமுகம், எஸ். வண் ணமுத்து மற்றும் வெங் கடாச்சலம் உட்பட ஏராள மானோர் கலந்து கொண் டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.