நடப்பாண்டில் இதுவரை காணாத அளவில நெல் கொள்முதல் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் மாதத்துடன் நிறை வடையும் கொள்முதல் பருவத்தில் 3.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இந்திய உணவுக்கழகம் திட்டமிட்டிருக்கிறது. இதற்குக் காரணமாக பொது விநியோகம் மற்றும் அவசரத் தேவைகள் போன் றவற்றை அக்கழகம் சுட்டிக்காட் டியிருக்கிறது. கடந்த ஆண்டில் 3.42 கோடி டன் நெல் கொள்முதல் செய் யப்பட்டது. இதுவரை, பஞ்சாப், சத்தீஸ்கர், ஆந்திரப்பிரதேசம் என்று 2 கோடி டன் வரையில் கொள்முதல் செய் துள்ள கழகம், மேற்கு வங்கத்தின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அங்கு மாநில அரசும் இத்தகைய கொள்முதல்களுக்கு ஆதரவு அளிப் பதில்லை. அங்கு கொள்முதலை மேற்கொண்டிருந்தால் மொத்த கொள்முதல் 4 கோடி டன்னைத் தொட்டிருக்கும்.

Leave A Reply