வேலூர், பிப். 17- வேலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத 10 மணி நேர மின்வெட்டைக் கண் டித்து பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை அருகே உள்ள திருவலம் ஈபி கூட்டு சாலை, சிப்காட் தொழிற் சாலை தொழிலாளர்கள் மற் றும் சுற்றியுள்ள பல் வேறு கிராமங்களைச் சேர்ந்தது 300க்கும் மேற்பட்ட பொது மக்கள், காட்பாடி – சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து மறியலில் ஈடுபட் டவர்களிடம் பேச்சு வார் த்தை நடத்தினர். இதை யடுத்து 2 மணி நேர சாலை மறியல் கைவிடப்பட்டது. இதேபோன்று, கேவி குப்பத்தை அடுத்த வடுகந் தாங்கல் கிராம மக்களுக்குக் கடந்த 2 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பத் து மற்றும் பிளஸ்-2 தேர் வுக்குப் படிக்கும் மாணவ -மாணவிகள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத் திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இத னால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலையில் திரண்டு திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து குடியாத் தம் காவல்துறை துணை கண் காணிப்பாளர் சிபி சக்கரவர் த்தி தலைமையில் காவல் துறையினர், ஊராட்சி மன்றத் தலைவர் வேம்பன் உள்ளிட் டோர் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத் தினர். விரையில் சீரான குடி நீர் விநியோகத் செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சிமன்றத் தலைவர் உறுதியளித்தார். இதை யடுத்து, மறியல் போராட் டம் கைவிடப்பட்டது. இத னால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.