லூயிஸ் சாதனையை எட்டுவேன் உசேன் போல்ட் நம்பிக்கை நடப்பாண்டில் நடை பெறவிருக்கும் லண்டன் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் நான்கு தங் கப்பதக்கங்களை வென்ற கார்ல் லூயிசின் சாத னையை எட்டுவேன் என்று உசேன் போல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டி யில் தடகளத்தில் நான்கு பிரி வில் பங்கேற்று தங்கப்பதக் கங்களை அமெரிக்காவின் கார்ல் லூயிஸ் கைப்பற்றி னார். வரும் ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4ஒ100 மற்றும் 4ஒ400 மீ ஓட்டப்பந்தயங்க ளில் பங்கேற்க போல்ட் முடிவு செய்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டில் பெய் ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டி நடந்த போது 100 மீ, 200 மீ மற்றும் 4ஒ100 மீ பந்தயங்களில் பங்கேற்ற போல்ட், மூன்றிலும் வெற்றி பெற்றார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, குளிர்காலத் தில் ஏராளமான பயிற்சி களை மேற்கொண்டேன். அவையனைத்துமே நன்றா கச் சென்றுள்ளன. போட்டி யில் பங்கேற்பதை ஆவலு டன் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறேன் என்றார். செக் குடியரசின் ஒஸ்ட்ராவா நக ரில் நடைபெறும் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டி யில் போல்ட் பங்கேற்கிறார். இந்தப் போட்டியில் தொடர்ந்து ஆறாவது ஆண் டாக அவர் கலந்து கொள் கிறார்.

Leave A Reply

%d bloggers like this: