லிங்குசாமியின் வெளியீட்டில் அரவான் வசந்தபாலன் இயக்கத்தில் மாபெ ரும் பொருட்செலவில் எடுக்கப்பட் டுள்ள திரைப்படம் அரவான். சாகித்ய அகாடமி விருது பெற்ற காவல்கோட் டம் நாவலில் பலநூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெறுவதாய் அமைக்கப் பட்டுள்ள கதையின் கருவை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பணி களும் நிறைவடைந்துள்ள நிலையில் தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட அம்மா கிரியேஷன்ஸ் நிறு வனம் முடிவு செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்திருப் பது படத்தின் வெற்றிக்கு கூடுதல் பல மாக இருக்கும் என திரையுலகினர் கரு துகின்றனர். மேலும், இத்திரைப்படத்தை வரு கின்ற மார்ச் மாதம் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வரு கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.