லண்டன் ஒலிம்பிக்ஸ்: இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு ஆலோசனை புதுதில்லி: 2010ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்த அனுபவங்களால், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் விளை யாட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியாவிடமிருந்து இங்கிலாந்து ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றது. நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டி இங்கிலாந்திற்குப் பெரிய சவால் என்று பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் உதவி இயக்குநர் சீமஸ் டக்கர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித் தார். காமன்வெல்த் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக இந்தியா சிறந்த முறை யில் பாதுகாப்பு அளித்திருந்தது. இதற்காக இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தனது விஞ்ஞானிகளுக்கு சிறப்பான முறை யில் பயிற்சி அளித்திருந்தது. கடந்த வருடம் இங்கிலாந்து வந்திருந்த அக்குழு டிஆர்டிஓவின் பயிற்சிகள் குறித்து எங்களுக்கு விளக்கம் அளித்தனர். அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம் என்று டக்கர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: