சென்னை, பிப். 17 – மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலை பகுதி, 121வது வட்டம், ரோட்டரி நகர் கிளை அலுவலகமான தோழர் வி.பி.சிந்தன் நினைவகத் திறப்பு விழா வியாழனன்று (பிப்.16) நடைபெற்றது. இந்த அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசியது வருமாறு: மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் ஏழை குழந் தைகளுக்கு இரவு பாடச் சாலைகளாகவும், மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் மையங்களாகவும் உள்ளன. எந்தப்பிரச்சனையாக இருந் தாலும் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை அணுகலாம். மத்திய அரசின் தவறான சந்தை பொருளாதார கொள்கையால், எதிர்கால சந்ததிகளான குழந்தைகள் சத்தான உணவு கிடைக்கா மல் அவதிப்படுகின்றனர். மாநில அரசும் பால், பஸ் கட்டணத்தை உயர்த்தி மக் களை வதைக்கிறது. மின் கட்டணத்தையும் உயர்த்தப் போகிறது. மத்திய அரசின் உலக மயக் கொள்கையை எதிர்த்து பிப்.28 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு உழைப் பாளி வர்க்கம் ஒன்று திரண்டு ஆதரவளிக்க வேண் டும். பெட்டிக்கடை வைத்தி ருப்பவர்கள் அவற்றை மூடி யும், பொதுமக்கள் வீடுக ளில் கருப்பு கொடி ஏற்றியும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக் கலாம். மத்திய அரசு தனது பட் ஜெட்டில் உணவு, உர மானி யத்தை வெட்ட உள்ளது; ஏராளமான புதிய வரிகளை விதிக்க உள்ளது. நிலக்குவி யலை உருவாக்க முயற்சிக்கி றது. பணம் உள்ளவனுக்கே வாழ்க்கை என்ற மத்திய, மாநில அரசுகளின் கொள் கைகளை எதிர்த்து நடை பெறும் போராட்டங்களை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். இந்நிகழ்ச்சிக்கு மயிலை பகுதிச் செயலாளர் எஸ். குமார் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் கே.விநா யகம் வரவேற்றார். தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஏ.பாக்கியம் கொடி யேற்றினார். வி.பி.சிந்தன் நூலகத்தை ஏ.ரவீந்திரன் திறந்து வைத்தார். மாவட் டக்குழு உறுப்பினர் டி.கே. ராஜன், எஸ்.கே.எஸ்.கல்விக் குழு கன்வீனர் ஏ.வெங்கடே சன், துறைமுகம் சிஐடியு சங்கத் தலைவர் எஸ்.கபாலி உள்ளிட்டோர் பேசினர். எம்.ராஜா நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: