கோவை, பிப். 17- வால்பாறையிலுள்ள பன்னிமேடு எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பின் முதல் பிரிவில் வசித்து வருபவர் சிவகாமி (32). தோட்டத் தொழிலாளியான இவர், செவ்வாயன்று இரவு தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த யானைக் கூட்டம் ஒன்று அவரது வீட்டைச் சூழ்ந் தது. அதில் ஒரு யானை வீட்டின் கதவை உடைக் கும் சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்த சிவகாமி, தனது இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வீட்டின் பின் கதவு வழியாக அருகிலுள்ள வீட்டிற் குச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த துணிகாய வைக்கும் கயிறு கழுத்தில் மாட்டியதால் தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இத னைத் தொடர்ந்து அவரை வால்பாறை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வன அதிகாரி ஆரோக்கியராஜ் ஜேவியர் கூறுகையில்: சிவகாமி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சிறிது நேரத்தில் , அவரை யானை மிதித்து கொன்றதாக வதந்தியை பரப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரித் ததில், சிவகாமியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மணிக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், படுகாயமடைந்த சிவகாமிக்கு எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி அளிக்க மறுத்த பன்னிமேடு எஸ்டேட் மேலாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சிவ காமி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply