சேலம், பிப். 17- சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் கட்சி சார்பில் முஸ்லிம் களின் வாழ்வுரிமை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநில தணிக்கைக் குழு தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வேண்டும். தமிழக அரசு முஸ்லிம் களுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று இருப் பதை 7 சதவிகிதமாக அமல் படுத்தவேண்டும். இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு 10 சதவிகி தம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழக தலைநகர் சென் னையில் மாபெரும் போராட்டம் நடைத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவிக்கப்பட் டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகி கள் அப்துல் வஹாப் ஹாருன் ரஷீத் , ஹஸன் ஷா அலி மற்றும் 50 பெண்கள் உள்பட 100க்கும் அதிக மானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை ச்தலைவர் ஷாஹின்ஷா தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் மசூபி யூசுப் எழுச்சி உரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் ஜஹாங்கீர் உசேன், செயலாளர் அஸ்ரப் அலி. பொருளாளர் அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் இதேகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.