முதலாளிகளின் வியாபார பக்தி பாரீர் தமிழ்நாடு கடுமையான மின்வெட்டினால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றது. மின்சார பற்றாக்குறை என்பது 2600 மெகாவாட்டிலிருந்து 3000 மெகாவாட் வரை உள்ளது. 11500 மெகாவாட் வரை தேவை உள்ளது. இது சென்ற ஆண்டை விட கூடுதல் ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு கடுமையான மின்வெட்டு உள்ளது. ஆனால் மின் உற்பத்தி என்பதை மின்வாரியம் முழுமையாக செய்திட்டாலே மின்பற் றாக்குறை இருக்கும். ஆனால் இருக்கின்ற மின்நிலையங் கள் மின்உற்பத்தி செய்யவில்லை என்பது கவனிக்கக் கூடிய ஒன்று. மின்வாரியத்திற்கு சொந்தமான அனல் மின்நிலை யங்களில் 210 மெகாவாட் திறனுள்ள மின்அலகு வடசென் னை அனல்மின்நிலையத்தில் பழுதாகி உள்ளது. இந்தப் பழுது வடசென்னை அனல்மின்நிலையத்தின் முதல் அலகில் பல தடவை 40 முதல் 50 நாட்கள் பழுது ஆகிவிடுகிறது. 2004, 2008, 2010ஆம் ஆண்டுகளில் ஒரே மாதிரியான பழுது ஏற்பட்டு வருவதை மின்வாரிய அதிகாரிகள் ஏன் கவனிக்கத் தவறுகின்றனர்? 2012 ஆம் ஆண்டிலும் பழுது ஏற்பட்டு உள்ளது. 40 நாட்களின் மின் உற்பத்தியை கணக்கிட்டால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே போன்று தமிழகத்தில் உள்ள ஏழு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வழக்கமாக தினம்தோறும் மொத்த நிறுவுத்திறனான 1180 மெகாவாட் அளவில் 1000 மெகா வாட் வரை மின்உற்பத்தியை அளித்து வந்தன. ஆனால் கடந்த ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பின்னால் மின் உற்பத் தியை குறைத்துக்கொண்டன. 560 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தியை செய்தது. பிப்ரவரி 14 ஆம் தேதிவரை இந்த நிலை நீடித்தது. பிப்ரவரி 15 ஆம்தேதி முதல் தனியார் மின் உற்பத்தி 1000 மெகாவாட் மின் உற்பத்தியாக அதிகரித் துள்ளது. இதற்கான காரணம் என்ன? எதனால் தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் குறிப்பாக பேசின்பிரிட்ஜ் அரு கில் உள்ள ஜிஎம்ஆர் வாசவி மற்றும் அப்போலா நிறுவ னத்திற்கு சொந்தமான பிள்ளை பெருமாநல்லுனூர் மின் நிலையங்கள் 500 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டன. மின்வாரியம் இம்மின்நிலையங்களிடம் வாங்கிய மின்சாரத்திற்கு கொடுக்கவேண்டிய தொகையை கொடுக்கா மல் விட்டதாக தகவல். தமிழகமே மின்வெட்டினால் தவியாய் தவிக்கும்போது முதலாளிகள் நேரம் பார்த்து நெருக்கடியில் உள்ள மின்வாரியத்திடம் தொகையை கறந்து விடுவதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இதே காலத்தில் ‘தானே’ புயலில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு மின்சாரமே இல்லாமல் இருந்தபோது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழக மின்வாரியம் தனது ஊழியர்களை வைத்து ஆறு மாதத்தில் முடிக்கவேண்டிய பணிகளை ஒருமாதத்தில் முடித் துக் கொடுத்து சாதனை படைத்துள்ளது என்றால் பொதுத் துறையாக மின்வாரியம் இருந்த காரணமே ஆகும். முத லாளிகளின் தேசபக்தி பணம் சம்பாதிப்பது மட்டுமே. – காண்டீபன், சென்னை

Leave a Reply

You must be logged in to post a comment.