மீனவர்கள் மரணத்திற்கு காரணமான இத்தாலி எண்ணெய் கப்பல் கொச்சி வந்தது கொச்சி, பிப்.17- கேரள மாநிலம் ஆலப்புழா கடல் பகுதியில் தமிழகம் உள் பட 2 இந்திய மீனவர்களை சுட் டுக்கொன்ற இத்தாலி எண் ணெய் கப்பல் கொச்சிக்கு வெள் ளிக்கிழமை அதிகாலை கொண்டு வரப்பட்டது. கடல் பகுதியில் மீன்பிடி பட குகளில் வந்த மீனவர்களை சோமாலியா கடற்கொள்ளையர் கள் என கருதிய இத்தாலி எண் ணெய் கப்பல் என்ரிகா எலக்சி-யில் இருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந் தத் தாக்குதலில் 2 மீனவர்கள் குண்டு பாய்ந்து இறந்தனர். அந்தக் கப்பல் ஊழியர்களி டம் காவலர்களும் கடலோர காவல்படையினரும் விசா ரணை நடத்தினர். கொச்சி எண் ணெய் முனையத்தில் கப்பல், பலத்த பாதுகாப்புடன் நிறுத்தப் பட்டது. கடல்சார் நிர்வாகத்தினரின் துவக்க கட்ட மதிப்பீட்டின்படி கப்பலில் இருந்த ஆயுதம் தாங் கிய காவலர்கள் மீன்பிடி படகு களை சுட்டிருக்கவேண்டும் எனத் தெரிய வந்துள்ளது. கட லோர காவலர்கள் கப்பலின் ஊழியர்கள் மீது கொலை வழக் குப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிக் குண்டு தாக்கு தலில் இறந்த மீனவர் வாலன் டைன் என்ற ஜெலஸ்டின் (45) மற்றும் அஜீஸ் டிங்கு (25) ஆகியோரது உடல்களில் குண் டுகள் பாய்ந்து இருந்ததைத் தொடர்ந்து காவலர்கள் கொலைவழக்குப் பதிவு செய் தனர். இந்தியாவில் உள்ள இத்தாலி யத் தூதர் கிளாம்போலோ கொச்சிக்கு வியாழக்கிழமை வந் தார். அவர் நகர காவல்துறை ஆணையர் எம்.ஆர்.அஜய் குமாரை சந்தித்துப் பேசினார். குண்டு தாக்குதலில் இறந்த அஜீஸ் உடல் கன்னியாகுமரி பூத்துறைக்கு கொண்டுவரப்பட் டது. ஜெலஸ்டின் உடல் கொல் லம் மாவட்டம் மூர்த்தகர பகுதி யில் அடக்கம் செய்யப்பட்டது. குற்றவாளிக்குத் தண்டனை: அந்தோணி மீனவர்களை சுட்டுக்கொன்ற குற்றவாளிக்கு தண்டனை அளிக் கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார். விதிமுறை, சட்டத்தை மீறி இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதனை தீவிரமாக பார்க்கிறோம் என தில்லியில் அவர் தெரி வித்தார்.

Leave A Reply

%d bloggers like this: