சென்னை, பிப். 17 – மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் வெள்ளியன்று (பிப்.17) சென்னையில் ஆர்ப்பாட் டம் செய்தனர். இதுபற்றிய விவரம் வரு மாறு: 2007ம் ஆண்டு பெட் ரோல் ரூ.47, டீசல் ரூ.33 என விற்பனையானது. அச்சம யத்தில் ஆட்டோக்களுக் கான மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக் கப்படவில்லை. தற்போது பெட்ரோல் ரூ.70, டீசல் ரூ.44 என விற்பனையாகிறது. அத்தியாவசியப் பொருட் களின் விலையும் கடுமை யாக உயர்ந்துள்ளது. ஆகவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். தி.நகர், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆட்டோக்களை அனும திக்க வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் போக்கு வரத்திற்கு இடையூறு இல் லாமல், பேருந்து நிறுத்தத் திற்கு அருகிலும், அலுவல கங்கள், பொதுமருத்துவ மனை, திரையரங்குகள் ஆகியவற்றின் அருகிலும் ஆட்டோ நிறுத்தங்கள் அமைக்க அனுமதிக்க வேண் டும், வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் உள்ள தரகர்களை தடை செய்ய வேண்டும், எரிவாயு நிரப்பும் நிலை யங்களை கூடுதலாக திறக்க வேண்டும், ஆட்டோ தொழிற்சங்க அமைப்பிற்கு சொசைட்டி அமைத்து அதன்மூலம் எரிவாயு விற் பனை நிலையங்களை அமைக்க வேண்டும், கேஸ் கிட் பொருத்திய ஆட்டோக் களுக்கு ரூ.3ஆயிரம் மானி யம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமலாக்க வேண்டும், நலவாரிய உறுப்பினர் பதிவு செய்ய காலதாமதம் செய்வதை கைவிட வேண் டும், பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும், ஓராண்டாக கூடாமல் உள்ள வாரியக்கூட்டத்தை கூட்ட வேண்டும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உள் ளது போல் ஆட்டோ தொழிலாளர் குடும்பங்க ளுக்கும் பென்சன் வழங்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவருக் கும் பேட்ஜ் வழங்கப்படும் என்று முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், போக்குவரத்து அலுவல கங்களில் தமிழில் படிவங் களை வழங்க வேண்டும், வீட்டுவசதி வாரிய வீடுக ளில் 10விழுக்காட்டை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒதுக்க வேண்டும், ஆட்டோ வாங்க தேசிய வங்கிகள் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத் தப்பட்டன. தென்சென்னை ஆட்டோ டாக்சி ஓட்டு நர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் சைதாப் பேட்டை பனகல் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.அப்பனு தலைமை தாங்கினார். க.பீம் ராவ் எம்எல்ஏ, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத் தலைவர் எம். சந்திரன், சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் வி.வி. திருமாறன், பொருளாளர் என்.ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலாளர் சி. குமார், மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார், மாநிலக் குழு உறுப்பினர் டி.சாந்தி உள்ளிட்டோர் பேசினர். வடசென்னை ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்டம் சார்பில் அயனா வரம் இணை போக்குவ ரத்து ஆணையர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பொதுச் செயலாளர் அ.லோ. மனோகரன், பொருளாளர் அ.பழனி, நிர்வாகிகள் ஜெய கோபால், பிரபாகரன், அம்சவேணி, வேம்புலி, என்.சி.தாமஸ், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.என். உண்ணி, சென்னை பெரு நகர மோட்டார் வாகன சங்க பொதுச் செயலாளர் வீ.குப்புசாமி உள்ளிட் டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: