விழுப்புரம், பிப். 17- தற்போது தமிழகமெங்கும் எட்டுமணிநேரம் மின் வெட்டால் அதிகம் பாதிப்படைந்து இருப்பது அச்சு தொழில் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் விழுப்புரம் நகரத்தில் 3+3 என்ற முறையில் கால நேரம் குறிப்பிடாமல் மின் வெட்டு ஏற்படுவதால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது அச்சு தொழில். விழுப்புரம் அச்சு தொழில் உரிமையாளர்கள் விழுப் புரம் தலைமை மின் வாரியத்திடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது; காலையில் எட்டு முதல் பத்து மணிவரையும் மாலை யில் இரண்டு மணியிலிருந்து நான்கு மணிவரை யிலும் மின் வெட்டை மாற்றி அமைத்தால் அச்சு தொழில் பாதிப்படையாது அந்த நேரத்தில் வெட்டு செய்தால் பள்ளி மற்றும் மருத்துவமனைகள் பாதிப்படையும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.