கோவை, பிப். 17- கோவையின் தொழில்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களையும் வாட்டிவதைக்கும் கடும் மின்வெட்டினைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கோவை அரிசிக்கடை வீதி வண்டிப்பேட்டையில் வியாழனன்று நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு எம்.இராதகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கண்டன உரையாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி பேசியதாவது: கோவை,திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து மட்டும் அரசுக்கு வரியாக ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வருகிறது. அதனால் மின்வெட்டிலிருந்து விலக்கு கேட்கவும், பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தவும் உரிமை உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மின்வெட்டிற்கு தீர்வு காண வேண்டும். மேலும், கோவை நகரின் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண நீலம்பூர் முதல் நரசிம்மநாயக்கன் பாளையம் வரையிலும், மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை யிலும் சுற்றுச்சாலை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். நகரின் முக்கிய இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைப்பது, அறிவித்தபடி உக்கடம், காந்திபுரம் ஆகிய இடங்களில் மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். இவ் வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மேற்கு நகரச் செயலாளர் பி.கே.சுகுமாரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா உள்ளிட்டோரும், திரளான முன்னணி ஊழியர்களும் பங்கேற்றனர். பி.சேகர் நன்றி கூறினார்

Leave a Reply

You must be logged in to post a comment.