கோவை, பிப். 17- கோவை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் பலமணிநேர தொடர் மின்வெட்டின் காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் சிறு, குறுந் தொழிற்சாலைகள் என சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இத்தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது, அமல்படுத்தப்பட்டு வரும் பல மணி நேர தொடர் மின்வெட்டின் காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருநாளைக்கு குறைந்தது 8 மணிநேர மின்தடை என்பதிலிருந்து அதிகபட்சம் 14 மணிநேர மின்தடையின் காரண மாக தொழில் நிறுவனங்க ளில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு வேலை அளிப்பதில் பெரும் சிர மம் ஏற்பட்டுள்ளது. இத்தொடர் மின் வெட் டினை கண்டித்து, கோவை யில் கடந்த சில நாட்களாக தொழில் நிறுவனங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் , கதவடைப்பு மற்றும் கருப்பு கொடி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இருப்பினும், மின்தடை குறைப்பதற் கான எத்தகைய நடவடிக் கையும் அரசின் சார்பில் எடுக்கப்படவில்லை. எனவே. வாரத்தில் ஒருநாள் மின் தடை என முறையாக அறி வித்து, மற்ற தினங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட வேண்டும் என தொழில் நிறுவனங்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்தும், தீர்வு என்பது காணப்படமால் உள்ளது. இதன் காரணமாக கோவையில் செயல்படும் 40 ஆயிரத்திற்கும் மேற் பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களின் உரிமை யாளர்கள் மேற்கொண்டு தொழில் நிறுவனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது. குறிப் பாக, பம்ப் உள்ளிட்ட என் ஜினீயரிங் தொழிலில் ஈடு பட்டு வந்த பல தொழிலா ளர்கள், மாற்று பணிகளை தேடி இடம் பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். இதேபோல் மாவட் டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் விசைத்தறி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் மின்தடையின் காரணமாக வேலை இழக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: