மாற்று சக்தி இடதுசாரிகளே! சிபிஐ மாநில மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு இராஜபாளையம், பிப், 17,- இந்தியாவிலும், தமிழகத்திலும் இடதுசாரிகள் தான் மாற்றுசக்தி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். இராஜபாளையத்தில் வெள்ளி யன்று துவங்கிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாட்டில் பங்கேற்று ஜி.ராம கிருஷ்ணன் வாழ்த்துரையாற்றினார். அவர் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு முடிந்து அடுத்து இரு தினங்களுக்குப் பிறகு 22ம் தேதி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு துவங் குகிறது. அம்மாநாட் டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர் தா. பாண்டியனை அழைத் திருக்கிறோம். இந்த இரண்டு மாநா டுகளும் தமிழகத்தில் இடது சாரி இயக்கத்தைப் பலப் படுத்திடுமென திடமாக நம்புகிறேன். பலத்தில் நாம் இன்னும் சரியான மாற்றாக இல்லாவிட்டாலும் வரும் காலத்தில் இடதுசாரிகள் தான் மாற் றாக வருவோம். இந்தியாவின் முதல் சட்டமன்ற தேர்தல் 1952 ல் நடை பெற்றது. அப்போது மாநிலத்தில் 14 இடங்களில் ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அதில் 6 இடங்கள் தஞ்சை பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் பி.ராமமூர்த்தி மதுரை சிறையில் இருந்தவாறே வெற்றி பெற்றார். காங் கிரஸ் கட்சிக்கு மாற்றாக கம்யூ னிஸ்ட்டுகள் இருந்தனர். அடுத்த டுத்து தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கடந்த 20 ஆண்டுகாலமாக மத்தி யில் ஆட்சி நடத்தியவர்கள் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கையை அமலாக்கி வருகிறார்கள். சமீ பத்தில் மன்மோகன் சிங், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முத லீட்டை அனுமதிக்கப் போவதாகக் கூறினார். இடதுசாரிகள் மற்றும் வியாபாரிகளின் கடுமையான எதிர்ப் பால் தற்காலிகமாக ஒத்தி வைத்துள் ளனர். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்ததும் மீண் டும் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை புகுத்த தயாராக உள் ளனர். இதனால் 4 கோடி சில்லரை வர்த்தகர்களும், அதைச் சார்ந்து வாழும் 20 கோடி பேரும் பாதிப் படைவர். தற்போது தேசிய நீர் கொள்கையை புகுத்த முனைகிறது அரசு. அதாவது,சில தினங்களுக்கு முன்பு தேசிய நீர்க்கொள்கையை விவாதத்திற்கு விடுவதாக மத்திய அரசு அனுமதித்துள்ளது. குடிநீர், பாசனநீர் விநியோகத்திலும் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதால் மக்களுக்கான குடிநீர் விநியோகமும் பாசனநீர் பயன்படுத்தும் விவசாயி களும் கடுமையான பாதிப்பிற் கு உள் ளாவார்கள். கல்வியும் சுகாதாரமும் ஏற்கெனவே தனியார்மயமாக்கப் பட்டுவிட்டது. மத்திய அரசினு டைய நவீன தாராளமயக் கொள் கையை எதிர்த்து அரசியல் வித்தி யாசமில்லாமல் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, பிஎம்எஸ் போன்ற அனைத்து தொழிற்சங்கங்களும் நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. தொழி லாளர்கள் வேலை நிறுத்தத் தயா ரிப்பு செய்யக்கூடிய நேரத்தில் தொழி லாளர்கள் போராடிப் பெற்ற உரி மையைப் பறிக்கக்கூடிய அடிப்ப டையில் வேலையில் சேர்ப்பதற்கும் வேலையை விட்டு நீக்குவதற்கும் முத லாளிகளுக்கு அதிகாரம் அளிப் பதற்கு சட்டத்திருத்தம் செய்ய வேண் டுமென்று மன்மோகன் சிங் பேசி யுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக மத்திய -மாநில அரசுகள் கடைப்பிடித்து வந்த நவீன தாராளமயக் கொள்கைக ளினால் நாடே சீரழிந்து வருகிறது. 1950களில் மொத்த உற்பத்தியில் தமிழ் நாட்டில் 50 சதவீதமாக இருந்த விவ சாயத்தின் பங்கு தற்போது 14 சதவீத மாக குறைந்து விட்டது. மொத்தத் தில் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு கடந்த 20 ஆண்டுகாலமாக மாநிலத்தை ஆண்ட திமுக-அதிமுக கட்சிக ளுக்கு மாற் றுக்கொள்கையில்லை. காங்கிரசும் பாஜகவும் கடைப்பிடிக்கும் பொரு ளாதாரக் கொள்கைக்கு மாற்றுக் கொள்கை இடதுசாரிகளிடம் மட் டுமே உள்ளது. சரியான மாற்றுக் கொள்கை யுள்ள இடதுசாரிசக்திகள் அரசிய லிலும் ஒரு மாற்று சக்தியாக மலர வேண்டும். இதற்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளில் கூட்டு இயக் கத்தை நடத்திட வேண்டும். தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அமெரிக்காவிலேயே அக் கொள்கையை எதிர்க்கும் எழுச்சி உருவாகி அது உலகம் முழுவதும் பர வியுள்ளது. இந்தியாவிலும் தாராள மயக்கொள்கைக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. எனவே, தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுடைய மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து இரு கட்சி களும் இணைந்து மேலும் பல போராட்டங்களை நடத்த வேண் டும். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக் கள் நலன் காக்கவும் தீண்டாமை ஒழிப்புக்காக, பெண்களுக்கு இழைக் கப்படும் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்காக இரு கட்சிகளும் களம் காண வேண்டும். இரண்டு கட் சிகளிடையே ஒற்றுமையை பலப் படுத்திட வேண்டும். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் அவர்களும் மார்க்சிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களும் கேரளாவில் ஆற் றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு கட்சிகளையும் ஒற்றுமைப் படுத்த 10 ஆயிரம் விஷயங்கள் இருக் கிறபோது பிளவு படுத்துகிற ஓரிரு விஷயங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று தோழர் பரதனும் ஒற்றுமையை உருவாக்கிட சிறுசிறு பிரச்சனைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்று தோழர் பிரகாஷ் காரத்தும் கூறிய கருத்துகளே தமிழ கத்திலுள்ள இரண்டு கட்சிக்கும் வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாநாட்டின் துவக்க விழாவிற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையேற்றார். துவக்கி வைத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேசிய செய லாளர் து.ராஜா எம்.பி., தேசிய கட் டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்ல கண்ணு, முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் ஏ.எம்.கோபு, சி.மகேந் திரன், பொ.லிங்கம் எம்.பி, மாவட் டச் செயலாளர் ராமசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் அ.சேகர் உள்ளிட்டு ஏராள மானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.