கோவை, பிப். 17- தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில் வரும் 19.2.12 ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சியின் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள், அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள், மருந் தகங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் மாநக ராட்சி பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத் துவமனைகள் ஆகியவற்றில் வழங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அன்று இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் மாநகராட்சி பிரதான அலுவலகம், இரயில் நிலையம், 5 பேருந்து நிலையங்கள், 5 நடமாடும் ஊர்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் உட்பட மொத்தம் 196 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் வழங்கப்படவுள்ள போலியோ சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானதா கும். எனவே, கோயம்புத்தூர் மாநகரில் வசிக்கும் அனைத்து பொது மக்களும் தங்களின் 5 வயதுக் குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 19.2.12 அன்று குழந்தைகளுக்கு எந்தவிதமான நோய்வாய் பட்டிருந்தாலும், அதனை கருத்தில் கொள்ளாமல் கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து வழங்கி இம்மாநகராட்சி பகுதியிலிருந்து போலியோ நோயினை அறவே ஒழித்திட அனைவரும் ஒத்து ழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர் தி.க. பொன்னுசாமி கேட்டுக்கொண்டார்.

Leave A Reply