பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளின் நலன் களைப் பாதுகாத்திட, வளர்த் திட ஓயாது செயல்படும் மத் திய அரசு, சுனாமி அடித்தாலும், தானே புயல் தாண்டவமாடினா லும் தனது வேலையை ஒரு போதும் தளர்த்தியதில்லை. மக்களுக்கு விரோதமான நவீன தாராளமயக் கொள்கையை முந்தைய பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட் டணி அரசும் தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அமலாக்கி வருகின்றன. அரசுகளுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பது வெவ்வேறு கட்சிகள் (பாஜக-காங்கிரஸ்) என்றாலும், ஒரே பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக் கும் கட்சிகளேயாகும். கடந்த 20 ஆண்டுகாலமாக மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள் கையினால் மேல்தட்டு வர்க்கத் தினர் வளர்ந்து வருவதும், பெரும்பான்மையான அடித் தட்டு உழைக்கும் மக்கள் நலிந்து வருவதையும் பார்த்து வரு கிறோம். ரூ.5,000 கோடிக்கும் அதிக மான சொத்துக்கு அதிபதியாக உள்ள டாலர் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 2003ல் 13 ஆக இருந்தது. 2011ல் 55 ஆக உயர்ந்துள்ளது. தேசமக்களைச் சுரண்டிக் கொழுத்த மூலதனத் தை வைத்து இந்தியப் பெரு முதலாளிகள் சுமார் 4 லட்சம் கோடிக்கு வெளிநாட்டில் தொழில் துவங்கியுள்ளனர். மேலும், இந் தியக் கனிம வளத்தையும் 120 கோடி மனித வளத்தையும் (சந் தை உள்ளிட்டு) கொள்ளைய டிக்க பன்னாட்டு நிறுவனங் களுக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கும் பணியை ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு சிர மேற்கொண்டு செய்து வருகிறது. மத்திய அரசு, விவசாயத்திற் கான நிதி ஒதுக்கீட்டை வெட் டிச் சுருக்கி, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலையை உயர்த்தி, விளைபொருளுக்கு நியாயமான விலை கொடுக்க மறுத்து, விவசாயத்தைத் தூக்கி நிறுத்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழு தந்த பரிந்துரைதனை அமலாக்க மறுத்து விவசாயிகளை வஞ் சித்துவிட்டது. மருந்து உற்பத்தியில் 100 சதவீதம் நேரடி முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம், இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யும் 3 பெரிய நிறுவனங் களில் 2 பன்னாட்டு நிறுவனங் களாகிவிட்டன. இந்திய மருந் துச் சந்தை இதன் மூலம் பன் னாட்டு நிறுவனங்களின் இறுக் கமான பிடியில் சிக்கி, உயிர் காக்கும் மருந்துகளின் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. தற்போது சில்லரைவணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு துடி யாய்த் துடிக்கிறது. இதனால் நேரடியாக சிறுவணிகத்தில் உள்ள 4 கோடி பேரும் சிறு வணிகத்தில் தொடர்புள்ள 20 கோடி பேரும் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளனர். உத்த ரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, சிறுவணிகத்தில் பன் னாட்டு நிறுவனங்களை அனு மதித்தே தீருவோம் என பிரதமர் பிடிவாதமாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு மத் திய அரசு தேசிய நீர்வளக் கொள்கை என அறிவித்து, இதை விவாதத்திற்கு விடுவதா கக் கூறியுள்ளது. வானம் பொழி கிறது, நீர்நிலை நிரம்புகிறது, ஆறு ஓடுகிறது, நிலத்தடி நீர் சுரக்கிறது, இது இயற்கையின் கொடையாயிற்றே இதிலென்ன கொள்கை வேண்டிக் கிடக்கி றது என பாமர மக்கள் கேள்வி யெழுப்புகிறார்கள். ஆனால் குடிநீரையும் பாசன நீரையும் வியாபாரப் பொருளாக மாற்றி, விநியோகம் செய்யும் உரிமை யைப் பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு அளித்திட மன்மோகன் சிங் அரசு முயற்சித்து வருகி றது. “ஆறு நெறயத் தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும், கோழி கொத்தித் தான் குடிக்கணும்’’ என்ற முது மொழி வேறு காரணத்திற்காக சொல்லப்பட்டிருந்தாலும், அது உண்மையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கல்வி சேவை என்பதற்குப் பதிலாக, வியாபார மாகி, வசதி படைத்தவர்களுக்கே வேலைவாய்ப்புள்ள உயர் கல்வி கிடைக்கும் என்ற நிலை உருவாகி விட்டது. சுகாதார வசதியும் கடைச்சரக்காக மாறி, காசுள்ளவர்களுக்கே தரமுள்ள மருத்துவசிகிச்சை என்ற அவலம் உருவாகிவிட்டது. மத்திய அரசின் மேற்கண்ட மக்கள் விரோதக் கொள்கை களினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எண்ணிலடங்கா. * சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். * உணவுப் பொருள் உள் ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வு ஏழை, எளிய மக்களை ஏறிமிதித்து வருகிறது. * வேலைவாய்ப்பு வளர்ச்சி 2000-05ல் 2.7 சதவீதமாக இருந்தது, 2005-10ல் 0.8 சதவீதமாகச் சரிந்துவிட்டது. வேலையில் இருப்பவர்களி லும் நிரந்தர வேலையில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து, 80 சதவீதம் பேர் அத்தக்கூலி களாக இருக்கும் அவல நிலை உருவாகிவிட்டது. * வறுமையும் வேலையின் மையும் ஒட்டிப்பிறந்த இரட் டைக் குழந்தைகளாக மக்களை வாட்டி வதைக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 50 ஆண்டுகாலமாக அமலில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை மறுபரிசீல னை செய்து, வேலைக்கு வைப் பதற்கும் வேலையை விட்டு நீக்குவதற்குமான உரிமையை முதலாளிகளுக்கு அளிக்க வேண்டுமென நாட்டின் பிரதமர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். கருத்தாலும் கரத்தாலும் உழைக்கக்கூடிய கோடானு கோடி உழைக்கும் மக்கள் பிப்ர வரி 28ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத் திற்கான தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், கொஞ்சமும் தயங்காமல் பிரத மர் உழைப்பாளி மக்களுக்கு விரோதமான கருத்தைத் தெரி வித்துள்ளார். நாடு தழுவிய அளவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் மத் திய அரசினுடைய நவீன தாரா ளமயக் கொள்கையை எதிர்த்து, மக்கள் நலன் காத்திட மகத் தான பல போராட்டங்களை நடத்தியுள்ளன. நடத்தியும் வருகின்றன. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டு காலத்தில் ஆட்சியிலிருந்த கட்சிகள் மத் திய அரசு கடைப்பிடித்த அதே தாராளமயக் கொள்கையை அமலாக்கியதால் மக்கள் சொல்லொண்ணாத் துயரத் திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வருகிற பிப்ரவரி 22 முதல் 25 வரை தியாகபூமியான கீழத்தஞ் சையில் நாகை நகரத்தில் நடை பெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தமி ழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் காக்க பல போராட்டத்திட்டங்களை விவா தித்து உருவாக்க இருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: