பொருளியல் அரங்கம் -க.சுவாமிநாதன் இந்தியாவும் தங்கமும் உலக தங்க கவுன்சில் அறிக் கையின் படி இந்தியர்கள் 2011ல் வாங்கிய தங்கத்தின் மதிப்பு ரூ.2,20,507 கோடிகள் ஆகும். 2010ல் இம்மதிப்பு ரூ.1,81,107 கோடிகளாக இருந்தது. தங்க மதிப்பில் அதிகம் இருந் தாலும் தங்கத்தின் எடை எனப் பார்க்கும்போது 2010ஐ விட 2011ல் தங்கச் சந்தை 7 சத வீதம்(1006 டன்களிலிருந்து 933 டன்களாக) குறைந்திருக் கிறது. ஆனால் தங்கத்தின் விலை கள் கூடியதாக சந்தையின் மதிப்பு அதிகரித்துள்ளது. 2010ல் தங் கத்தின் சராசரி மதிப்பு 10 கிரா முக்கு ரூ.18000 ஆக இருந்தி ருக்கிறது. 2011ல்ர 10கிராமுக்கு ரூ.23620 ஆகக் கூடியுள்ளது. அதாவது தங்கத்தின் விலைகள் ஓராண்டில் 31 சதவீதம் கூடியுள் ளது. மற்ற முதலீடுகளெல்லாம் பாதுகாப்பற்றவையாக மாறும் போது தங்கத்தை நோக்கி ஓடு கிறார்கள் மக்கள்.

Leave A Reply

%d bloggers like this: