பணி நியமனத்தில் முறைகேடு: பெரியார் பல்கலை.யில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை சேலம், பிப். 17- சேலம் பெரியார் பல் கலைக் கழகத்தில் பணி நியமனம் செய்ததில் முறை கேடு நடைபெற்றதாக கிடைக்கப் பெற்ற புகாரை யடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சேலத்தை அடுத்துள்ள கருப்பூரில் கடந்த 1997ம் ஆண்டு பெரியார் பல் கலைக் கழகம் தொடங்கப் பட்டது. இந்த பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த பதிவாளர் ஓய்வு பெற்றதை யடுத்து, நீண்ட நாட்களுக் குப் பிறகு விளையாட்டுத் துறை தலைவராக இருந்த அங்கமுத்து என்பவர் பதி வாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். இதனி டையே பல்கலையில் நிய மிக்கப்பட்ட பேராசிரியர் கள், பணியாளர்கள், தற் காலிக பணியாளர்கள் உள்ளிட்டோர் போலி சான் றிதழ் அளித்து பணியில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சந்திரமௌலி தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் வியாழனன்று இரவு பல் கலையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக் கிய ஆவணங்களை அதி காரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு வழங் கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் விடைத்தாள்கள் திருத்துவதில் பல முறை கேடுகள் நடைபெற்றது சோதனையில் தெரியவந் துள்ளது. இதனால் தேர் வாணையாளர், பதிவாளர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப் புத்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் விசா ரணை நடத்தினர். இக்குற் றங்கள் நிரூபணமானால் சம்பந்தப்பட்ட பணியா ளர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுக் கப்படும் என சோதனை யில் ஈடுபட்ட அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இப்பல்கலையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதன் காரணமாக அங்கு பணி யாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அச்சம் ஏற்ப டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: