பெண்கள் கழிப்பறைகளைக் கேட்பதில்லையாம்: ஜெய்ராம் இழிபேச்சு புதுதில்லி: செல்போன் வேண்டும் என்றுதான் பெண்கள் கேட்கின்றனர். கழிப் பறைகள் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுப்பதில்லை என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தயாரித்த ஆசிய-பசிபிக் ஆயிர மாண்டு வளர்ச்சி இலக்கு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “சுகாதார மேம்பாடு என்பது மிக வும் சிரமமான விவகாரம். இப்போது நடத்தை மாற்றங்கள் குறித்து நாம் பேசு கிறோம். செல்போன்கள் வேண்டும் என்று பெண்கள் கேட்கின்றனர். ஆனால் கழிப்ப றைகளை அவர்கள் கேட்பதில்லை. இது தான் அவர்களின் மனநிலை” என்று கூறினார். 60 சதவீதம் பேர் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள் உள்ள நாட்டில் 700 மில்லி யன் பேர் செல்போன்களை வைத்துள் ளனர். நாம் கழிப்பறைகளை கட்டுகிறோம். ஆனால் கழிப்பறைகளை அவர்கள் பயன் படுத்திக் கொள்வதில்லை என்று அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: