விழுப்புரம், பிப். 17- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத் தில் தானே புயலால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் அனை வருக்கும் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கையில் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இலவுகாத்த கிளியாக நிவாரணம் கிடைக்கும் என்று ஏங்கிடும் விவசாயி களை பாதுகாக்க மானிய திட்டங் களை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கண் டமங்கலம் வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் டி.சுதாகர் தலைமை தாங் கினார்.மாவட்டச் செயலா ளர் என். சுப்பிரமணியன், பொருளாளர் என். சந்தி ரன் ஒன்றிய செயலாளர் பழனி, ஏழுமலை, சௌந்தர் மற்றும் பலர் பேசினர்.

Leave A Reply