பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த வேண்டும் பிப். 28 வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி ஆயத்த கருத்தரங்கம் பிஎஸ்என்எல் பங்கு களை தனியாருக்கு விற்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்தும் பிப். 28 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வலி யுறுத்தியும் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று (பிப். 16) சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் கருத்தரங் கம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை குறைக்க உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங் களை உறுதியாக அமல்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், போனஸ் மற்றும் வைப்பு நிதிகளுக்கு தற்போதுள்ள தகுதி உச்சவரம்பு, தொகை உச்சவரம்பு ஆகியவற்றை முற்றிலும் நீக்க வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவ னத்தை பலப்படுத்த மத்திய மாநில அரசுகள் பொருளா தார ஆதரவை தர வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வேலை நிறுத்த சிறப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன. கே.கோவிந்தராஜ் (பிஎஸ் என்எல்இயு), ஆர்.பட்டா பிராமன் (என்எப்டி), ஜே. விஜயகுமார் (டிஇபியு), சி. ஆறுமுகம் (சேவா) ஆகி யோர் கூட்டு தலைமை வகித் தனர். பிஎஸ்என்எல் தொழிற் சங்கத் தலைவர்கள் புனித உதயகுமார், பி.அபிமன்யு, சந்தேஸ்வர்சிங், சுப்பு ராமன், ஆர்.ரவீந்திரன், சி.கே.மதிவாணன், எஸ். செல்லப்பா, ஏ.செல்லாண்டி, பி.என்.பெருமாள் ஆகி யோர் கருத்துரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: