சென்னை, பிப். 17 – அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கெவின்கேர் நிறுவ னம் இப்போது பால் உற் பத்தியில் இறங்கத் திட்ட மிட்டுள்ளது. யுஹெச்டி எனப்படும் தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்படும் இந்த பால் சாதாரண வெப்ப நிலையில் 120 நாள்கள் வரை கெடாமலிருக்கும் என்று நிறுவனத் தலைவர் சி.கே. ரங்கநாதன் தெரிவித்துள் ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே இதற்கென அமைக்கப்பட்டுள்ள பால் பண்ணை நாளொன்றுக்கு 65 ஆயிரம் பால் பாக் கெட்டுகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இதை படிப்படியாக ஒரு லட்ச மாக உயர்த்தவும் திட்ட முள்ளதாக அவர் கூறினார். கெவின்ஸ் என்ற பெயரில் அரை லிட்டர் பாக்கெட்டு களாக இது அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. பால் விற் பனை மூலம் நடப்பு ஆண் டில் நிறுவன வருமானம் ரூ. 65 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். இந்த பாலை விற் பனை செய்ய மாநிலம் முழு வதும் 60 ஆயிரம் சில்லறை விற் பனை மையங்கள் உள்ள தாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.