பாகிஸ்தானில் கார்குண்டு வெடித்து 11 பேர் பலி இஸ்லாமாபாத், பிப். 17- வட பாகிஸ்தானின் பழங்குடியினர் பிராந்திய மான பராக் சினார் சந் தையில் வெள்ளிக்கிழமை கார் குண்டு வெடித்தது. இந்தக் கார்குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்பில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் சேத மடைந்தன. இறந்தவர்களில் பெரும் பாலானவர்கள் பொது மக்கள். குண்டு வெடிப்புக்கு தற்கொலைப் படை நபர் காரணமாக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின் றன. இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாதக் குழுவும் பொறுப்பு ஏற்கவில்லை.

Leave A Reply