பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பெருந்திரள் தர்ணா தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் முடிவு மே.பாளையம், பிப். 17 – மலைவாழ் மக்களின் நலன்களை பாதுகாத்திட வலியுறுத்தி வரும் தமிழக சட்ட மன்ற பட்ஜெட் கூட் டத்தொடரின் போது பெருந் திரள் தர்ணா நடத்துவதென மலைவாழ் இளைஞர் சங் கத்தின் மாநிலக்குழு கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தி லுள்ள மார்க்சிஸ்ட் கட்சி யின் நஞ்சப்பன் நினைவக அலுவலக கட்டிடத்தில் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உபகுழுவான தமிழ்நாடு மலைவாழ் இளை ஞர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கடந்த வியாழ னன்று (பிப்.16) நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பா ளர் லெனின், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் வேல்முருகன், மாநில துணைத்தலைவர் ஏ.ஆர்.பாபு ஆகியோர் முன் னிலை வகித்து சிறப்புரை யாற்றினர். இதில் சமூக பொருளா தாரம் மற்றும் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியுள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த் தும் வகையில் அவர்களுக் கென உண்டு உறைவிடப் பள்ளிகளை அதிகப்படுத்தி, ஆசிரியர்களை நியமித்து, அவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். மலைவாழ் மக்களில் தகுதியுடையவர்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங் கப்படாததால் ஏற்பட் டுள்ள கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர அரசு சலுகை களை பெற முடியாத நிலையை மாற்ற வேண்டும். இவர்களுக்கென ஒதுக்கப்பட் டுள்ள அரசு பணியிடங்கள் மற்றும் மத்திய மாநில உயர்கல்வி நிறுவங்களில் உள்ள இடங்களை முறை யாக வழங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவம், மின்சாரம் போன்ற அடிப் படை வசதிகளை வழங்க வேண்டும். மேலும்,வன விலங்குக ளிடமிருந்து மலைவாழ் மக்களை காப்பாற்றி, அவர் களின் வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 29 ம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது சென்னை யில் மலைவாழ் இளைஞர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.