மஞ்சூர், பிப். 17- நீலகிரி மாவட்டம் தமையந்தோரை பகுதியில் போடப்பட்டுள்ள ஒப்பந் தத்தை நிறைவேற்றாமல் தாய்சோலை எஸ்டேட் நிர்வாகத்தை கிடப்பில் போட்டுள்ளனர். இத னால், நோயாளிகளை தோளில் தூக்கிச் சென்று சிகிச்சை பார்க்கும் அவ லம் ஏற்பட்டுள்ளது. இத னைக் கண்டித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர். தாய்சோலை எஸ் டேட் பகுதியிலுள்ள கேட்டை திறந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு விடக்கோரி, கடந்த ஜன வரி 28-ம் தேதி குந்தா தாலுகா அலுவலகத்தில், குந்தா வட்டாட்சியர், மஞ் சூர் காவல்துறையினர் மற் றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், விவசாயி கள் தரப்பிலிருந்து குந்தா தாலுகாவிற்குட்பட்ட தயமைந்தோரை பகுதிக்கு செல்லும் பிரதானகேட்டை உடனே திறக்க வேண்டும், கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலை நேரடியாக தமையந்தோரை பகுதியில் உள்ள விவசாயிகளிட மிருந்து தேயிலையை கொள்முதல் செய்ய வாகன வசதி ஏற்ப டுத்த வேண்டும், அவசர காலங்களில் பொதுமக் கள் தங்களின் வாகனங் களை பயன்படுத்துவதற்கு ஏதுவாக கேட்டை திறக் கும் வகையில் அதன் சாவியை அருகில் வைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட் டன. பின்னர், அவர்கள் முன்னிலையில் ஒப்பந்த மும் கையெழுத்தானது. ஆனால், இதுநாள் வரை அந்த ஒப்பந்தத்தின் மீது எந்தவிதமான நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இங்கிருந்து நோயாளியை ஏற்றிச்செல்வதற்காக, அரசின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், தமையந்தோரைப் பகுதிக்குள் ஆம்புலன்ஸ் வேனை அனுமதிக்க எஸ் டேட் நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர். இத னால், நோயாளியை அங் கிருந்து தோளில் தூக்கிக் கொண்டு வந்து பின்னர் கேட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த ஆம்புலன் சில் ஏற்றி மருத்துவம னைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்துள்ளனர். இதுபோன்று தாய் சோலை எஸ்டேட் நிர்வா கம் தொடர்ந்து அடாவடி யில் ஈடுபட்டு வருவது குறித்து மஞ்சூர் காவல் துறை மற்றும் குந்தா தாசில்தார் ஆகியோரிடம் பல முறை புகார் அளிக்கப் பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஜன.28 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத் தக் கோரி குந்தா தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆல் தொரை தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தை வாலிபர் சங்க உதகை தாலுகா செயலாளர் எம். ஏ.வினோத் துவக்கி வைத் தார். ஆர்ப்பாட்டத்தில் மாதவன், டி.மாதன், எம். ஈரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், குந்தா வட்டாட் சியர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. பின்னர், அவர் தாய்சோலை எஸ்டேட் கேட்டை திறப்பதற்கும், தேயிலை கொள்முதல் செய்வதற்கு கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலை வாகனத்தை தமையந் தோரை பகுதிக்கு அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி யளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.