உதகை, பிப். 17- நீலகிரி தேயிலை சுற்றுலாவின் துவக்கவிழா இன்று (பிப்.18) உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்த வெளி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, அரசு முதன்மைச் செயலாளர் வி.கு. ஜெயக்கொடி, சுற்றுலாத்துறை ஆணையர் ராஜேஷ்கிக்கானி, மாவட்ட வருவாய் அலுவலர் இல. நிர்மல்ராஜ், தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பல வாணன், உதகை, குன்னூர், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Leave A Reply