ரஷ்யா நவீன எம்.ஐ.17 ஆயுத ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன புதுதில்லி, பிப். 17- நவீன எம்.ஐ.17 ஆயுத ஹெலி காப்டர்கள், இந்திய விமானப் படையில் வெள்ளிக்கிழமை முறைப்படி சேர்க்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் ரஷ்யா வில் இருந்து வாங்கப்பட்டது ஆகும். மிக உயர மான இடத்திற்கு வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் திறனை மேம் படுத்துவதற்காக இவை வாங்கப் பட்டுள்ளன. இந்திய விமானப்படையில் ஆயுத ஹெலிகாப்டர்களை முறைப்படி ஒப்படைக்கும் வித மாக இந்த எந்திரங்களை செயல் படுத்தும் பிரிவின் அதிகாரியிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி சாவிகளை ஒப்படைத்தார். ஆயுதம் தாங்கிய 80 ஹெலி காப்டர்களை ரஷ்யாவிடம் வாங்கு வதற்கு இந்தியா கேட்டிருந்தது. தற்போது இந்த ஹெலிகாப்டர் களில் ஒரு பகுதி வந்தடைந் துள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் வந்து சேர்ந்தது. முதல் பிரிவில் 3 ஹெலிகாப்டர்கள் பதிண்டா (பஞ்சாப்), ஸ்ரீநகர் (ஜம் மு-காஷ்மீர்) மற்றும் பேக்டோக்ரா (மேற்குவங்கம்) பகுதிகளில் இயக் கப்படும். ஏற்கெனவே, இதேப்போன்ற ஹெலிகாப்டர்கள், வடக்கு பிரிவு பகுதியில் இயக்கப்படுகின்றன என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வகை ஹெலிகாப்டரி லேயே வானிலையை காண்கா ணிக்கும் ரேடார்கள், தனி பைலட் ஓட்டும் திறன், இரவு நேரத்தில் கண்காணிக்கும் வசதி ஆகியவை உள்ளன. எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள் சியாச்சின் பனிமலைப் பகுதிகளி லும், ஐ.நா. திட்டப்பணிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: