நம்மைப் பற்றி பேசும் “தோனி”! பிரகாஷ் ராஜ் முதன் முதலில் இயக்குநர் பொறுப் பேற்றுத் தயாரித்து வழங் கியிருக்கும் படம் தோனி . இன்றைய கல்வி முறையின் தொடர் பாதிப்புகளைக் காட்டமான விசாரணைக்கு உட்படுத்துகிறது இந்தப் படம் . சமகாலத்தில் பெற் றோரையும், சமூகத்தையும் குழந்தைக்கு நேர் எதிராக நிற்க வைக்கும் கல்வி அணு குமுறை குறித்துச் சாட்டை யடியாக விவாதங்களை தோனி முன்வைக்கிறது. பதினேழாம் வாய்ப்பாடு தெரியாது. இரண்டு பக்க அறிவியல் பாடத்தை எந்தக் காலத்திலும் மனப்பாடம் செய்ய முடியாது. ஒரு பாடத்திலும் பாஸ் மார்க் கூட அல்ல, ஒற்றை இலக் கத்திற்கு மேல் மார்க் வாங்க இயலாது. இப்படியான மாணவனை ஒன்பதாம் வகுப்பு வரை அரசு விதிக ளின் படி தாங்கிவந்த பள் ளிக் கூடம், அதற்குமேல் படி ஏறாவிட்டால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பாஸ் சதவீதத்தைக் குறைத்து, பள்ளியின் பெரு மையைச் சிதைத்து, அடுத்த டுத்து புதிய மாணவர் சேர்ப்பு விகிதத்திலும் கை வைத்துவிடும் அபாயம் உண்டு என்பதால், பெற் றோர் அவர்களாகப் ஒன்பதாம் வகுப்பிலேயே பையனைத் தங்கவைத்து விட விண்ணப்பம் கொடுக்க வேண்டும் அல் லது டி சி வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு ஓடிவிட வேண்டும். ஏன் என்றால் அவன் மண்டு, மடையன், முட்டாள், படிப்பு ஏறாத ஜடம்…. அவனால் ஏன் இந்தக் கல்வித் திட்டத்தின் படிக் கட்டுகளை ஏறமுடியாது என்றால், படத்தின் தலைப் பிலேயே சொல்லி இருப் பது மாதிரி அவன் தோனி யின் தீவிர பக்தன். கிரிக் கெட் அவனது உயிர். அபா ரமான ஆட்ட நாயகனாக உருவெடுத்துக் கொண்டி ருக்கும் அவனது விளை யாட்டுத் திறமை பற்றி கிரிக் கெட் பயிற்சியாளர் என்ன சத்தியம் செய்தாலும், அதைக் கேட்பதற்கான காதுகள் கல்வித் திட்டத்தில் இல்லை. அதன் வழி மூளையை வடிவமைத்து விட்ட பள்ளி முதல்வருக்கோ, வகுப்பு ஆசிரியருக்கோ இல்லை. மனைவியைப் பறி கொடுத்துவிட்டு இரண்டு குழந்தைகளின் எதிர்காலத் திற்காக அரசுப் பணியில் இருந்து கொண்டே ஓவர் டைம் வேலையும், வீட்டில் ஊறுகாய் தயாரித்து பாட் டில்களில் அடித்துத் தெருத் தெருவாய் அலைந்து விற்ற படி வருவாயையும், தனது உளவியல் விடுதலையையும் தேடியபடி அல்லும் பக லும் அலையும் தந்தைக்கும் பிடிபடுவதில்லை. மகனின் கல்வி வேட் டைக்கு ஒருபுறமும், தங்கை வீட்டு விசேஷம் போன்ற திடீர் செலவுகளுக்கு மறுபு றமும், இடையே வயதுக்கு வந்துவிடும் மகளின் சடங் குச் செலவுகளுக்காகவும்… நிரந்தரமாகவே கந்துவட் டிக்காரனின் தயவிற்கும், துரத்தலுக்கும் இடையே நிம்மதியற்றுத் துடிக்கும் நாள் ஒன்றில் நடந்துவிடும் அதிர்ச்சி நிகழ்வில் பெற்ற மகனையே தந்தை அடிக் கும் அடியில் தரையில் விழுந்து ஏற்படும் காயத்தில் கோமா நிலைக்குப் போய்வி டும் மகன், அதுவரை கோமா நிலையில் இருக்கும் தந்தையையும் கல்வி உலகத் தையும் சமூகத்தையும் உலுக்கி எழுப்புவது தான் தோனி திரைப்படம்…. குழந்தைக்குப் பிடித்த துறையில் அவனுக்கு இருக் கும் திறமையை வெளிக் காட்ட இடம் தராது அவனை எதற்கும் உதவாதவ னாகப் பட்டம் சுமத்த நாம் யார் என்பது தான் மையக் கேள்வி. தன்னை ஓரளவு புரிந்து கொண்டு தனக்கு உதவி செய்யும் தங்கை யோடு கணிதம் கற்கும் முயற்சியில், பதினேழாம் வாய்ப்பாடு எத்தனை தடவை சொன்னாலும் புரி யாதா என்று அவள் பொறுமை இழந்து கேட்ப தும், தனக்கு கணக்கு தெரி யாது கிரிகெட் தெரியும் என்று கோபமாகப் பேசத் தொடங்கும் அந்தச் சிறு வன் கிரிக்கெட் நாயகன் தோனியின் சாதனை மைல் கற்களின் துல்லியமான புள் ளிவிவரங்களையும், கிரி கெட் ஆட்டக்களம், பந் தின் சுற்றளவு, மட் டையின் அதிகப்படி நீளம், இன்ன பிற அடிப் படை கணக்குக ளையும் இமை மூடித் திறக் கும் நேரத்தில் சரமாரியாக மனத்திலிருந்து எடுத்துக் கொட்டுவதும், நான் ஒன் றும் முட்டாள் அல்ல என்று நிறுத்துவதும் அதிர வைத்துக் கண்ணீரைப் பெருக்கும் இடம். படம் கல்வியை மட்டு மல்ல, விலைவாசி உள் ளிட்ட வேறு சில பிரச்ச னைகளையும், இது எது பற் றியும் வெறும் புலம்பல் மட் டும் செய்துவிட்டுப் பொது வெளியில் குரல் கொடுக் காது, தனது அன்றாடத்தில் உழலும் நடுத்தர வர்க்கம் பற் றியும் அற்புதமாக விமர்ச னம் செய்கிறது. எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வந்தால் சந்திக்க வேண்டிய தாக்குத லையும் ஒளிவுமறைவின்றி எடுத்து வைக்கிறது. ஆனால் தொடர் போராட்டத்திற் கான சாதகமான விளைவு கள் குறித்த நம்பிக்கையை யும் முன்வைக்கிறது. நில அபகரிப்பு முதற் கொண்டு, கம்ப்யூட்டரை யும் டி வி யையும் விலைகள் குறைத்து, காய்கறி விலையை உயர்த்திக் கொண்டிருக்கும் மோசமான பொருளாதாரக் கொள்கை வரை நடப்பு கால விஷயங்கள் வசனங்களில் கூராகத் தெறிக்கிறது. ஒரு மாணவனின் தோல்வி அவ னது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்றும், சமூகத்தின் பொறுப்பு என்ன என்பதை யும் சொல்லும் இடத்தில் தோனி திரைப்படம் இப் போதைய தமிழக கல்விச் சூழலில், மேற் படி அதிர்ச்சி நிகழ்வின் பின்புலத்தில் மிகப் பெரிய கவன ஈர்ப்பாக உருப்பெறுகிறது. பார்க்க வும், விவாதிக்கப்படவும் முக்கிய கருப் பொருளையும் நமது கையில் வைக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.