தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் முதல்வர்கள் எதிர்ப்பு புதுதில்லி, பிப். 17- மத்திய அரசு அமைக்க உள்ள தேசிய அளவிலான பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதிகளின் நட மாட்டம் குறித்து தகவல்கள் கிடைத்தால் மத்திய அரசின் உளவு அமைப்புகள், ரகசிய விசா ரணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் ஏஜென் சிகள் நேரடியாகச் சென்று கைது நடவடிக்கை அல்லது தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்கு அதி காரம் அளிக்கும் விதமாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்சிடிசி) மார்ச் 1ம் தேதி முதல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மாநிலங்களின் உரிமை களில் அத்துமீறி தலையிடும் வித மாக உள்ளது என்றும், மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண் டுமென்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் கூறியுள்ளனர். இத னை கைவிட வேண்டும் என்று பிர தமர் மன்மோகன் சிங்குக்கு, மத் திய அரசில் அங்கம் வகிக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நா யக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித் திருந்தார். தமிழக முதல்வர் ஜெய லலிதாவும் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். பீகார் முதல்வரான நிதிஷ்குமா ரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலை யில், குஜராத் முதல்வரான நரேந் திர மோடி மத்திய அரசின் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனிடையே, தேசிய பயங்கர வாத தடுப்பு மையம் குறித்து மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் கூறி யுள்ளார். “மத்திய அரசு இதற்கென புதிய சட்டதிட்டம் எதையும் இயற்ற வில்லை. தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து மாநில அரசுகளிடம் தெரியப் படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இருக்கும் சட்டத்தின் அடிப்படையில்தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய நலன் கருதியே தேசிய பயங்கர வாத தடுப்பு மையம் உருவாக்கப் பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: