தில்லியில் சு.வெங்கடேசனுக்கு பாராட்டு தமிழ்ச்சங்க விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேச்சு புதுதில்லி, பிப். 17- சாகித்ய அகாடமி விருது பெற்ற சு. வெங்கடேசனுக் குத் தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத் தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பின ருமான டி.கே.ரங்கராஜன் தலைமை வகித்தார். தில்லியில் இலக்கியத் துக்காக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது காவல் கோட்டம் நாவலை எழுதிய தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடே சனுக்கு வழங்கப்பட்டது. இதற்காக சு. வெங்கடேச னைச் சிறப்பிக்கும் வகை யில், டில்லித் தமிழ்ச் சங்கத் தின் சார்பில் பாராட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்கள வை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் தலைமை வகித்தார். தில்லித் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் டாக்டர் சுந்தர்ராஜன் வர வேற்புரையாற்றினார். சங் கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி யின் பிரேம்சந்த் விருது பெற்ற இலங்கைப் பேராசி ரியர் சுமதி சிவமோகன், தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைப் பொறியாளர் முத்து இரு ளன், மதுரை பாத்திமா கல் லூரித் தமிழ்த்துறை முன் னாள் தலைவர் எம்.ஏ. சுசி லா மற்றும் மத்திய அயல் வர்த்தகத்துறை செயலாளர் விஜய் ராஜ்மோகன் ஆகி யோர் வாழ்த்துரை வழங் கினர். தலைமையுரையில் டி.கே. ரங்கராஜன் பேசிய தாவது: நான் ஒரு பெரிய எழுத் தாளன் இல்லை. என்னு டைய வேலை, உழைப் பாளி மக்களுக்காக வாதாடு வது, போராடுவது, சிறை செல்வது. சு. வெங்கடேசன் என்னுடைய இயக்கத்தைச் சேர்ந்தவர். நானும் அவரும் அதிகமாகப் பேசியது இலக் கியம் அல்ல, அரசியல்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீது தமிழில் பேசத் துவங்கியவர்கள் பொது வுடைமைவாதிகள்தான் என்று அவர் எழுதிய ஓர் ஆராய்ச்சிப் புத்தகம், தமி ழகத்தில் பலருடைய வாயை அடைத்தது. சு. வெங்கடே சனும் நானும் பலமுறை செல்போனில் பேசிக் கொண்டாலும் பல நேரங் களில் அரசியல்தான் பேசு வோம். சு. வெங்கடேசனுக்குள் இலக்கியத்தின்பால் இந்த அளவிற்குப் பரிச்சயம் புதைந்து இருக்கும் என்பது எங்களில் பலருக்கு அதிர்ச்சி. 2006இல் அவரைச் சட்ட மன்றத் தேர்தலில் வேட்பா ளர் நிறுத்த நாங்கள் முடிவு செய்தபோதெல் லாம் அவர் இவ்வளவு பெரிய எழுத்தா ளர் என்று எங்களுக்குத் தெரியாது. பொதுவுடைமை இயக் கம் தொழிலாளர்களுக்காக மட்டும் செயல்படுகிற இயக் கம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கிறார் கள். அது சமுதாயத்திற்காக வும் செயல்படுகிற இயக்கம் என்பது சு.வெங்கடேசன் போன்றவர்களுக்கு இது போன்ற மேடைகளில் சிறப் புச் செய்யப்படுகிறபோது தான் மற்றவர்களுக்கும் அறி முகப் படுத்தக்கூடிய மிகப் பெரிய வாய்ப்பு எங்களுக் குக் கிடைக்கிறது. காவல்கோட்டத்தில் பிறமலைக் கள்ளர்கள் வீரம் குறித்து பேசப்படுகிறது. இன்றும் கூட அவர்களு டைய வீரம் சாதாரணமான வீரம் அல்ல. அங்குள்ள பெண்களிடம் வீரம் இன் றைக்கும் இருக்கிறது. இன் றைக்கும்கூட அவர்கள் மத்தியில் பெரிய அளவிற் குப் படித்த பெண்களைப் பார்க்க முடியாது. ஆயினும் அச்சமுதாயத்தில் பெண் களுக்கான உரிமை என்பது இன்றும் அதிகமாகவே இருக்கிறது. ஒரு பெண்ணுக் குக் கணவனைப் பிடிக்க வில்லை என்றால் குச்சியை முறித்துக்கொண்டு, தாலி யைக் கையிலே கொடுத் துவிட்டு பெண் போய்க் கொண்டே இருக்கலாம். இன்றும் அந்த வாழ்க்கை அந்தப் பகுதியிலே இருக் கிறது. அவர்கள் மறுமணம் செய்து கொள்வதும் மிக எளிதானது. இந்த சமயத்தில் இரண்டு முக்கிய அம்சங்களைச் சுட் டிக்காட்ட விரும்புகிறேன். இலங்கையிலிருந்து வந் துள்ள பேராசிரியர் சுமதி சிவமோகனுக்குத் தெரிவித் துக் கொள்ள விரும்புகி றேன். இலங்கைப் பிரச் சனை குறித்து நாடாளுமன் றத்தில் பேசுகிறபோது மிக வும் விளக்கமாகப் பேசி னேன். தலைவர் குறுக்கிட்ட போது, மற்ற கட்சி உறுப் பினர்கள் தலையிட்டுக் கூடு தலாக நேரம் கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி வாங்கிக் கொடுத்த னர். ஒன்றுபட்ட இலங் கைக்குள்ளிருந்துதான் தமிழ் மக்கள் பிரச்சனைக ளைத் தீர்க்க முடியும் என் பது எங்கள் இயக்கத்தின் ஆழமான கருத்து. இப்போ தும் ஒன்றுபட்ட இலங்கை யில் இந்திய அரசு தன்னு டைய ராஜீய உறவுகளைப் பயன்படுத்தி தமிழர்கள் புனர்வாழ்வுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். கிட்டத் தட்ட எல்லா இயக்கங்க ளும் ஒரே நிலைக்கு வந்தி ருக்கின்றன. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கை சென்று நேரடியாக மக்களைச் சந் திக்க இருக்கிறது. இக்குழு வில் அனைத்துக் கட்சி யைச் சேர்ந்த உறுப்பினர் களும் இருப்பார்கள். இலங் கை மக்கள், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள், தேயிலைத் தோட்ட மக்கள், பாடுபடக்கூடிய மக்கள் அனைவரையும் பாதுகாப் பாக வைக்க வேண்டும் என் பதில் ஒரு சகோதர அண் டை நாடு என்ற முறையில் எங்களுக்குப் பொறுப்பு உண்டு. அதனை நிறைவேற் றுவோம் என்று சுமதி சிவ மோகன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து, கேரளத்தில் இருப்பதுபோல், கர்நாட காவில் இருப்பதுபோல் தமிழகத்திலும் ஒரு சாகித்ய அகாடமி உருவாக்க வேண் டும். அவ்வாறு உருவாக்கப் படும் அமைப்பில் தமிழ் தெரிந்த அரசியல்வாதிகள் வசம் அதனை ஒப்படைக் காமல், தமிழில் அக்கறை யுள்ள கல்விமான்களைக் கொண்டு குழுக்களை நிய மிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, சு. வெங்கடேசனுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வாழ்த்துக் களை மீண்டும் ஒருமுறை கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு டி.கே.ரங்க ராஜன் தன் தலைமையுரை யில் தெரிவித்தார். மற்றவர் களின் வாழ்த்துரைகள் முடிந்தபின், சு.வெங்கடே சன் ஏற்புரை வழங்கினார். சங்கத்தின் பொருளாளர் ப. அறிவழகன் நன்றி கூறினார். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.