திரையரங்குகள் வேலை நிறுத்தம் திரைப்பட தொழிலுக்கு விதிக்கப் பட்டுள்ள சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் திரைப்படத் துறையினர் நடத்தும் போராட்டத்தின் ஒருபகுதியாக வரு கின்ற 23ம்தேதி திரையரங்குகள் மூடப் பட உள்ளன. மத்திய அரசு திரைத்துறைக்கு விதித் திருக் கின்ற சேவை வரியை ரத்து செய்ய கோரி திரைப் பட துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இத னால் படப்பிடிப்புகள் மற்றும் தயாரிப்பு பணிகள் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளது. திரைத்துறையி னரின் நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தப்போராட்டத் திற்கு ஆதரவாக வரும் 23ம்தேதி தமிழ கம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மூடப்பட உள்ளதாக தமிழ்நாடு திரை யரங்க உரிமையாளர்கள் சம்மேள னத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: