கடந்த ஒரு வார காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த பின்வரும் சம்பவங்கள் வெறும் செய் திகள் மட்டுமேயல்ல. சென்னையில் 9ம் வகுப்பு மாணவனால் வகுப்பு ஆசிரியை கொடூரமாகக் குத்திக் கொலை. அதற்கு முதல் நாள் தாம்பரத்தில் தோழியை மயக்கமடையச் செய்து பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கைது. பஸ் தினம் கொண்டாட அனு மதிக்காததால் கல்லூரி மாணவர்கள் வன் முறை தாக்குதல், சென்னை பெரியார் காலனி யில் பத்தாம் வகுப்பு மாணவர் தேர்வுபயத்தில் தற்கொலை. உடுமலை ஆர்.கே.ஆர். பள்ளியில் ஒரு மாத காலத்திற்குள் அடுத்தடுத்து இரு மாணவர்கள் சாவு. ஒருவரது மரணம் மர்ம மானது, மற்றொருவரது மரணம் தூண்டப்பட்ட தற்கொலை. இந்த செய்திகள் சுட்டும் ஒவ்வொன்றும் இங்கும், அங்குமாக நடந்த தனித்த சம்பவங்கள் அல்ல. நம் கல்வி அமைப்பின் அடிப்படையான கோளாறுகள் காரணமாக, முற்றிப்போன நோய்களின் கோரமான வெளிப்பாடுகள் தான் இவை. கல்வி நிலையத்தில் ஆசிரியர் – மாண வர் உறவு, குடும்பத்தில் பெற்றோர் – பிள்ளை கள் உறவு, சமூகப் பொதுவெளியில் பிற தரப் பினருடனான உறவு என ஒவ்வொரு கோணத் திலும் உறவுச் சிக்கல்கள் முறுக்கேறிப் போயிரு க்கின்றன என்பதன் அடையாளமே இவை. கடந்த இருபதாண்டு காலத்தில் இந்தியா விலும், அதன் ஒரு பகுதி யாக தமிழகத்திலும் ஆட்சியாளர்களால் பின் பற்றப்பட்ட தாராள மயக் கொள்கைகள் தான் இவற்றுக்கான மூல காரணமாகும். கல்வி வணிகமயமாக்கப்பட்டதும், நுகர்வுக் கலாச்சாரம் திணிக்கப்பட்டதும் சீர்கேட்டுக் கான இரட்டைத் திறவுகோலாக இருக்கின்றன. கல்வி வணிகப் பொருளாக மாற்றப்பட்ட நிலை யில், அதை சிறந்த “சரக்காக” எப்படியாவது விற் பனை செய்ய வேண்டும் என்ற எண்ணமே கல்வி வியாபாரிகளிடம் மேலோங்கியிருக்கிறது. தங்களிடம் இருப்பதே சிறந்த சரக்கு எனக் காட்டுவதற்காக எத்தகைய சாகசத்தைச் செய் யவும் அவர்கள் துணிகிறார்கள். அந்த சிறந்த சரக் கைத் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படியாவது வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று வாய்ப் புள்ள பெற்றோர்கள் துடியாய், துடிக்கிறார்கள். இவர்களுக்கு இடையிலான பரிவர்த்தனை யின் விளைபொருளாக மாறிப் போகிறார்கள் இளைய தலைமுறையினர். வெகு நீண்ட காலத் துக்கு ஜனநாயக உறவாடல் இல்லாமல் மூடிய சமூகமாக இருந்தது, இன்று கட்டற்ற முறையில் திறந்துவிடப்பட்டதால் பீறிட்டு வெடிக்கிறது. இதை எப்படி எதிர் கொள்வது? மாற்றம் தேவை! ஆட்சியாளர்களின் கொள்கைகளில் மாற்றம் தேவை! கல்வி என்பது காசு சம்பாதிக் கும் சரக்கு அல்ல, அது எதிர்காலத்தை, பண் பாட்டை, மானுடத்தை வடிவமைக்கும் மிக அடிப்படையான அறிவுக் கருவூலமாகும். அதே சமயம் கொள்கை மாற்றம் என்ற ஒற்றை வரிப் புரிதல் போதுமானதல்ல. நம் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் அது குடும்பமானா லும், கல்வி நிலையமானாலும், பொதுவெளி எது வானாலும் திறந்த மனதுடனான ஜனநாயக உரையாடல் தேவை! ஆக்கப்பூர்வமாக நடத்தும் அந்த உரையாடல் மூலமாகவே உறவுச் சிக்கல் களை விடுவிக்க முடியும். ஆரோக்கியமான மாற் றத்தை ஏற்படுத்த முடியும்.

Leave a Reply

You must be logged in to post a comment.