‘தமிழகத்தை இருளில் தள்ளும் முதலாளித்துவக்கூட்டம்’ மதுரை, பிப்.17- கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறந்தால், அதனைச் சுற்றியுள்ள பகுதி களில் விலை உயந்த தாதுப்பொருட் களை எடுப்பது தடைபடும் என்பதால், பெருமுதலாளித்துவக்கூட்டம் அதைத் தடுக்கச் சதிசெய்கிறது. ஆட்சியில் உள்ள பலரிடம் அவர்களுக்குள்ள நெருக்கம் தமிழகத்தை இருளில் தள்ளி வருகிறது என சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ கூறினார். தொழிற்சங்க உரிமையைப் பாது காக்க வலியுறுத்தி பிப்ரவரி 28 ம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி மதுரை அரசு விரைவுப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழனன்று விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிஐடியு மாநிலப்பொதுச்செயலாளர் அ.சவுந்த ரராசன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பொதுத் துறையைக் காக்க வேண் டும் என பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் என்பது, இது வரை நாம் பெற்று வந்த சலுகைகளைக் காக்க வேண்டும் என்பதற்கு மட்டு மின்றி, இருக்கும் உரிமைகளை விட்டுத் தர முடியாது என்பதற்காகத்தான். போக்குவரத்துத் துறையில் தனியார் மயம் வேகமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. லாபம் தரும் 50 சதவீத வழித் தடங்களை தனியாருக்குக் கொடுக்க இன்றைய முதல்வர் ஜெயலலிதா 2002 ஆம் ஆண்டே முயற்சி செய்தார். நாட்டு டைமையாக்கப்பட்ட பேருந்துகள் இயக்கப் படும் வழித்தடத்தில் வேறு பேருந்துகள் இயக்கக்கூடாது. ஏனெனில், அந்த வழித் தடமே பொதுத்துறைக்குச் சொந்த மானது. இந்த வழித்தடங்களை தனி யாருக்கு விட மோட்டார் வாகனச்சட்டத் தில் உரிமையில்லை. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆகவே, அந்த சட்டத்தின் பிரிவை நீக்க வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். இந்தியாவில் 248 பொதுத்துறை நிறுவனங்களில் 25 இலட்சம் ஊழி யர்கள் பணிபுரிகிறார்கள். உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே துறை இந்தியாவில் தான் உள்ளது. உல கத்தின் பலநாடுகளில் தனியாருக்கு விடப்பட்ட துறைகளை மீண்டும் பொதுத் துறையில் எடுத்து வருகிறார்கள். ஒரு காலத்தில் இந்தியாவில் எல்ஐசி என் பது தனியாரில் தான் இருந்தது. மக் களின் சொத்துகளைச் சூறையாடிய தனியார் நிறுவனங்களிடமிருந்து 1966 ஆம் ஆண்டு காப்பீட்டுத்துறை பொதுத் துறையாக மீட்கப்பட்டது. இதில் தனியார் யாரும் தலையிடக்கூடாது என சட்டம் இயற்றப்பட்டது. காற்றில் களவாடிய 1.76 இலட்சம் கோடி ரூபாய் பொதுமக்களின் சொத்தாகும். இந்த சொத்துக்களை தனியார் கொள்ளையடிக்க வழிவகுத்தது தனியார் மயம் தான். அடுத்து தண்ணீரைத் தனி யார்மயமாக்க மத்திய அரசு துடித்து வரு கிறது. குடிநீர் மட்டுமின்றி பாசன நீரை யும் விலைகொடுத்து வாங்க வைக்க திட் டம் தயாரித்து வருகிறார்கள். தமிழகத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வு என்பது தனியார் பேருந்து முதலா ளிகள் கொள்ளையடிக்க போடப் பட்ட திட்டமாகும். கடந்த 10 ஆண்டு களாக தனியாருக்குக் கொடுத்த வழித் தடங்களை கைப்பற்ற அரசு தயாராக இருக்கிறதா? ஆம்னி எனக்கூறிக் கொண்டு ரெகுலராக இயக்கப்படும் பேருந்துகள் மீது தமிழக அரசு நட வடிக்கை எடுக்கத்தயாரா? அதேபோல் பால் விலை உயர்வு தனியார் பால்கம்பெனிகளைக் கொழுக்க வைக்கும் ஏற்பாடாகும். விலையில்லா அரிசி தருகிறேன் எனக்கூறி, ஒவ் வொரு குடும்பத்திலிருந்தும் மாதம் 90 ரூபாயை பாலின் மூலம் அரசு கறந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பத்துமணிநேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மதுரையில் இரவு நேரத்தில் 5 முறை மின்வெட்டு நடை பெறுகிறது. தற்போது மின்சாரக் கட் டணத்தை உயர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தடையில்லா மின் சாரம் பெருமுதலாளிகளுக்கு வழங்கி, தடை ஏற்பட்டால் அவர்களுக்கு நஷ்ட ஈடு தரும் தமிழக அரசு, பத்து மணி நேரம் மின்சாரத்தைப் பறிப்பதற்கு தமிழக மக்களுக்கு என்ன இழப்பீடு தருகிறது? கூடங்குளத்தில் 1400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள அணு மின்நிலையத்தைத் திறக்கவிடாமல் சிலசக்திகள் தடுத்து வருகின்றன. அணுகதிர் வீச்சால் கேன்சர் வரும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக புற்று நோய்த் துறையில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்த சாந்தா, கூடங்குளம் அணுமின்நிலை யத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார். முன்னாள் குடியரசு, தலை வர் விஞ்ஞானி அப்துல்கலாமும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். கூடங் குளத்தில் உள்ள மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு அணுமின்நிலையத் தைத் துவக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு அமைத்துள்ள குழு பரிந்துரைக்குப் பின் னாவது கூடங்குளத்தை இயக்குவதன் மூலம் மின்வெட்டில் இருந்து மக்கள் தப்பமுடியும். ஆனால், கூடங்குளம் அணுமின்நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விலை உயர்ந்த தாது மணலை அள்ளி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெருமுதலாளிக்கூட்டம், இத்திட்டத்திற்கு எதிராக சதி செய்து தமிழகத்தினை இருளில் தள்ளி வருகிறது. ஆட்சியில் உள்ள பலரிடம் அவர்களுக்கு நெருக்கம் உள் ளது என்று கிளம்பி வரும் செய்திகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல தயங்குகிறது. இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசி னார்.

Leave a Reply

You must be logged in to post a comment.