தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு சென்னை, பிப். 17- தனியார் பள்ளிகளில் தொடக்க வகுப்புகளில் நலிந்த, வாய்ப்பு மறுக் கப்பட்ட பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட் டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் விவரம் வருமாறு:- குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் அவர்களை நலிந்த பிரிவினராகக் கருதி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெற்றோர் இல்லாத குழந்தைகள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர், திருநங்கையர், துப்புரவுத் தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் இந்த ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும். இவை தொடர் பான சான்றிதழ்கள் தகுதி பெற்ற அலு வலரால் வழங்கப்பட வேண்டும். இந்தப் பிரிவின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படி வங்களை தகுதி வாரியாகப் பிரித்து வைக்க வேண்டும். 25 சதவீத இடங்களுக்கு மேல் விண்ணப்பங் கள் பெறப்பட்டால் ரேண்டம் முறை யில் மாணவர்கள் தேர்வு செய்யப் படுதல் வேண்டும். மாணவர் சேர்க்கைப் பட்டி யலை பொதுமக்களின் பார்வைக் காக தகவல் பலகையில் இடம் பெறச் வேண்டும். இந்த ஒதுக்கீட் டின் கீழ் விண்ணப்பப் படிவங்கள் அளித்தல், மாணவர் சேர்க்கை அனைத்தும் மே மாதத்தில்தான் செயல்படுத்தப்பட வேண்டும். பள்ளி நிர்வாகம், பொதுமக்க ளின் சந்தேகங்களைத் தீர்ப்பதற் காக சிறப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. 044-28278742 என்ற எண்ணில் இந்தக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: